KARTHIGAI DEEPAM WISHES 2024 IN TAMIL: ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர்.
அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே பறக்க பறக்க சிவன் உயர்ந்து கொண்டே போனார்.
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL | கார்த்திகை தீபம் வரலாறு
விஷ்ணு கீழே போசுப்போக சிவனின் கால்கள் நீண்டு கொண்டே போனது. இருவருமே தோல்வியடைந்து சிவபெருமானிடம் செய்வதறியாது நின்றனர். அப்போது சிவன் இருவரிடமும், இந்த உலகில் யாருமே பெரியவர் இல்லை, நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார்.
இதைக்கேட்ட பிரம்மா, விஷ்ணுவின் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த ஜோதி வடிவக்காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமாள்.
வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம்
கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டு வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சரியான நேரமாக இருக்கும்.
KARTHIGAI DEEPAM WISHES 2024 IN TAMIL | இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்
நட்சத்திர ஒளியில் வானம் நிறைந்திருப்பது போல், தீப ஒளியில் உங்கள் இல்லம் நிறையட்டும். இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.
சகல சுகங்களையும் அருளும்… கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்…!
என்றென்றும் வாழ்வில் ஒளி மிகுந்திட, வீட்டில் தீப ஒளி ஏற்றுவோம் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துகள்..!
அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சியான நாளில் மங்களம் உங்கள் வாழ்க்கையை நிரப்பும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பிரகாசமான, மகிழ்ச்சியான, மகிழ்ச்சியான கார்த்திகை தீபத்தை நான் விரும்புகிறேன்.
கார்த்திகை தீபத்தின் புனித நாள் உங்கள் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்.