KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர்.
பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர்.
அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே பறக்க பறக்க சிவன் உயர்ந்து கொண்டே போனார்.
விஷ்ணு கீழே போசுப்போக சிவனின் கால்கள் நீண்டு கொண்டே போனது. இருவருமே தோல்வியடைந்து சிவபெருமானிடம் செய்வதறியாது நின்றனர். அப்போது சிவன் இருவரிடமும், இந்த உலகில் யாருமே பெரியவர் இல்லை, நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார்.
இதைக்கேட்ட பிரம்மா, விஷ்ணுவின் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த ஜோதி வடிவக்காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமாள்.
வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம்
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டு வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சரியான நேரமாக இருக்கும்.
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL | TAMIL PUTHANDU WISHES | தமிழ்ப் புத்தாண்டு வரலாறு
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22-ஆம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள் புரிவார்கள். இதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 23 ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறும்.
இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிறைவு நாளான 10வது நாள் நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.
பரணி தீபம்
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள்.
அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.
மகாதீபம்
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை மாதம்
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு: இவை 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்
கார்த்திகை நாள்
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
கார்த்திகை விழா
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.
திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து “சொக்கப்பனை”க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.
இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர். கார்த்திகை விழாவைக் குமராலாய தீபம், சர்வாலய தீபம், விட்டுணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.
- குமராலய தீபம் – முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
- விட்டுணுவாலய தீபம் – விட்டுணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
- சர்வாலய தீபம் – ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
திருவண்ணாமலை கிரிவலம்
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன.
மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள பாதையை ஜடவர்ம விக்கிரம பாண்டியன் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது.
பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.
எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகிறார்கள் என்றாலும் முழு நிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.
எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம்.
தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.
மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்……) உச்சரிக்க வேண்டும்.
KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL: அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டுச் செல்லக் கூடாது. மலைவலப்பாதையில் அஷ்டலிங்கங்கள், நந்திகள், 300 க்கும் மேற்பட்ட குலங்கள் உள்ளன.
அஷ்ட லிங்கங்கள்
- இந்திரலிங்கம் ( கிழக்கு திசை), கிரிவலத்தில் முதலாவது லிங்கம்
- அக்னிலிங்கம் ( தென்கிழக்கு), செங்கம் சாலையில் அமைந்துள்ள இரண்டாவது லிங்கம்.
- எமலிங்கம் (தெற்கு) கிரிவலப்பாதையில இராஜகோபுரத்தில் இருந்து 3 வது கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மூன்றாவது லிங்கம்.
- நிருதி லிங்கம் – (தென்மேற்கு) கிரிவலப்பாதையில் 4 வது லிங்கம்.
- வருண லிங்கம் (மேற்கு) இராஜகோபுரத்திலிருந்து 8 வது கி.மீ. அமைந்துள்ள 5 வது லிங்கம்.
- வாயுலிங்கம் – (வடமேற்கு) கிரிவலப்பாதையில் ஆறாவது லிங்கம்
- குபேர லிங்கம் (வடக்கு) கிரிவலப்பாதையில் 7வதாக அமைந்துள்ள லிங்கம்.
- ஈசான்ய லிங்கம் – வடகிழக்கு) எட்டவாது மற்றும் கடைசி லிங்கம்.