REPUBLIC DAY 2024 WISHES IN TAMIL: இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினம் எப்படி கொண்டாடப்படும்?
REPUBLIC DAY 2024 WISHES IN TAMIL: குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார்.
முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும். மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள்.
REPUBLIC DAY IN TAMIL | இந்தியக் குடியரசு நாள்
மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்கள்.

REPUBLIC DAY 2024 WISHES IN TAMIL | குடியரசு தின வாழ்த்துக்கள் 2024
உலகிலேயே மிக நீண்ட அரசியலைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர். பி.ஆர். அம்பேத்கரை இந்நன்னாளில் நினைவுக்கூறுவோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
அரசியலமைப்பு சட்டம் பிரிவு-15இன் படி மதம், சாதி, இனம், மொழி, தொழில், பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
அனைவரும் சமம் என்ற ஜனநாயக நாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்!
ஜனநாயகம் மலர்ந்த இன்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என்று உறுதிமொழி ஏற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!
நாட்டை சீரழிக்கும் மதவெறி, சாதிவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!
இந்த நாளில், உங்கள் தாய்நாட்டின் மகிழ்ச்சியான தருணங்களை நீங்கள் பாதுகாப்பீர்கள் என்றும் அதை எல்லா பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பீர்கள் என்றும் உறுதியளிக்க வேண்டும். 2024 இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
இந்த தேசத்தை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் மாணவருக்கு கற்பிக்கட்டும். ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகளுக்கு கற்பிக்கட்டும். நம் தேசத்தின் அழகை வளர்க்கட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள் 2024!

இந்த குடியரசு தினத்தன்று நம் நாட்டின் சுதந்திர போராளிகளின் வெற்றியை நினைவு கூர்ந்து மகிழ்கிறோம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். ஜெய்ஷிந்த்!
குடியரசு தினத்தின் மகிமை என்றென்றும் நம்முடன் இருக்கட்டும். குடியரசு தின வாழ்த்துக்கள்!
இந்த குடியரசு தினத்தன்று, நம் நாட்டின் பொன்னான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நினைவில் கொள்வோம். இந்த நாளில் நம் தேசத்தைப் பற்றி பெருமைப்படுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!
இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

அடிமைப்பட்டு போன தாய் நாட்டை,
தன் இன் உயிரை துச்சம் என எண்ணி,
போராடி சுதந்திரத்தை பெற்று தந்த
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்
சமத்துவம் தொடர்ந்து,
சம உரிமை நீடித்து,
பாரதம் செழித்து,
மக்கள் வாழ்வு சிறக்க,
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
இந்தியன் என்பது நம் பெருமை.
வேற்றுமையில் ஒற்றுமை
என்பது நம் மகிகை.
நம்மை பிரிந்து சிறுமை படுத்தும்
தீய சக்திகளை வேரருத்து,
இந்தியன் என்று பெருமை கொள்வோம்.
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
எத்தனை மதம், எத்தனை மொழி,
எத்தனை சாதி, எத்தனை பிரிவுகள்,
இருந்தாலும், நாம் அனைவரும்
பாரதத்தாயின் பிள்ளைகள் தான்.
வாழ்க மக்கள்! வளர்க பாரதம்!
குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

தாய் மீதான பாசம் போன்றதே
தாய் நாட்டின் மீதான பாசமும்.
தாயை நேசிப்போம்!
தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்!
வந்தேமாதரம்
குடியரசு தின வாழ்த்துக்கள்
வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது இன்றைய தேவையாகும். நாட்டை சீரழிக்கும் மதவெறி, பயங்கரவாதம் ஆகியவற்றை வீழ்த்தி நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து முன்னெடுக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
அன்று முதல் இன்று வரை
முடிவை எட்டா தீப ஒளியாய்
வேற்றுமையில் ஒற்றுமை
நம்மோடும் நம் உணர்வோடும்
தினமும் பயணம் செய்ய
வழி வகுத்த அரசியல் அமைப்போடு
அனைவரும் பயணிப்போம்!
நாம் இந்தியர் என்ற லட்சிய உணர்வோடு நம் தேசத்தின் புகழை காத்திடுவோம். இல்லாமை இல்லாத பாரதம் உருவாகிட இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நம் உரிமைகளை விட்டுக் கொடுக்காமலும், கலாச்சாரத்தை பேணிக்காப்பதிலும் உறுதியாக இருக்க அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ
நிச்சயம் முப்படையுடன்
உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!
இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்டத்தை 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதே 26-ம் நாளில் செயல்படுத்த முடிவெடுத்தது. அந்த நாளே இந்தியாவின் குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நன்னாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்!
குடியரசு தேசம் நம் தேசம்
நெடுந் புகழ் ஓங்கியொளி வீசும்
அன்பின் வழியில் நாம் சென்றோம்
அஹிம்சையால் அதை வென்றோம்!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
ஈகையும் இரக்கமும் இணைந்து இன்று
பகையை வெல்வோம் நட்பால் நன்று
ஒற்றுமை அன்பினை அனைத்து நின்று
வேற்றுமை வென்றால் உண்டு ! மலர்ச்செண்டு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

பட்டொளி வீசி பறக்கக் காணீர் !
பாரத புகழ்க்கொடி சிறக்கக் காணீர் !
செப்பும் செம்மொழிகளை சரம் தொடுத்து
பாரத மாதாவுக்கு மாலை சூட வாரீர்!
அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்தோம்
மனிதச் சங்கிலி என்னும் மகத்துவத்தால்
புனித பாரதம் காக்க புறப்படுவோம் !
இனிய இந்தியா இன்புற்று வாழியவே!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
ஆகாய சாகஸம் ஆர்ப்பரித்து காணீர்
அலங்கார அணிவகுப்பை கொடியசைத்து காணீர்
ஓர்வானம் ஓர்பூமி ஓர் மக்களாய் ஒன்றிணைவோம்
பேரானந்தமிகு குடியரசுதினத்தினை போற்றிடுவோம் !
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
இளைஞர்கள் கைகோர்த்து நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக் கொடிதனை ஏற்றுவோம்!!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
அன்று முதல் இன்று வரை முடிவை எட்டா தீப ஒளியாய்
வேற்றுமையில் ஒற்றுமை நம்மோடும் நம் உணர்வோடும்
தினமும் பயணம் செய்ய வழி வகுத்த அரசியல் அமைப்போடு
அனைவரும் பயணிப்போம்!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

அடக்கு முறை செய்த அன்னிய ஆங்கிலேயர்களிடமிருந்து
அகிம்சை என்னும் அறவழியில் வெற்றிவாகை சூடிய தினம்
உப்பு சத்தியாகிரகங்களால் தன் உடல்களை வருத்தி
தாயகத்திற்க்கு பெருமைத்தேடித்தந்த தினம்
தன் குருதிகளையும் தன் தேகங்களையும் தன் தாய்நாட்டிற்காக
அர்ப்பணம் செய்தவர்களை நினைவுக்கூறும் தினம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
தன் வம்சா வழியினர்கள் வசந்தமாய் வாழ
தன் வாழ்நாட்களை வலியுடன் கழித்தவர்களை வருத்தமுடன் நினைக்க
சுதந்திரக்காற்றை நம் தேசத்தில் நிலவவிட
தம் சுகங்களையெல்லாம் தூக்கியெறிந்த தியாகிகளின் ஒரு தியாக தினம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
நம் தாய்நாட்டினை அன்னியர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற
பாடுபட்டவர்களை இன்றுமட்டும் நினைப்பதில் நியாயமில்லை
எந்த நோக்கத்தில் நமக்காக சுதந்திரத்தை வாங்கித்தந்தார்களோ
அதை கண்ணியத்துடன் காத்துக்கொள்ளவேண்டியது நம் கடமை
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
நாட்டை நினைக்கும்போது நாட்டுக்காக போராடியவர்களையும்
நினைவு கூறுவோமாக!
அத்தனை பேரையும் புகழ்ந்து போற்றுவோம்!
எந்தாய் திருநாட்டில் வாழும் கோடான கோடி மக்களுக்கும்
உலகம்முழுவதும் இருக்கும் என் இந்திய குழந்தைகளுக்கு
என் அன்பான குடியரசு தின வாழ்த்துகள்!!

சுதந்திர காற்றை சுகமாய் அனுபவிக்கும் நம் சுதந்திர கொடி போல்
நாமும் நமக்காக பாடுபட்டு வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி வாழ்வோமாக
வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
விடுதலை இந்தியாவில் விடியலைத் தந்தது குடியரசு!
பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்! வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்!
அனைவரின் உள்ளத்தைச் சமப்படுத்தியது குடியரசு!!
இந்த உரிமைக்குரிய நாளை போற்றிடுவோம்!
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள எங்கள் தாய் – அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
நாட்டுப்பண் பாடியதும் – உடல்
நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
நாளும் உழைப்பதே தேசபக்தி !..
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-
சாதி கொடுமைகள் செய்ய நினைக்காத
கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..
பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து பணிவது மட்டுமல்ல தேசபக்தி-
உயர் பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்
பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !….
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
தியாகிகள் பெருமை நினைந்து தினம்
திண்ணையில் அமர்ந்து பேசுவதை மட்டும் செய்யாமல்,
தனித் திறமையதை வளர்த்து உலகில் – நம் தேசத்தின் புகழ் உயர்த்த வேண்டும்!
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்; விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்; தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை; தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்; விடியலை வென்றும் காண்போம்.
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே
இயம்புவதை விட்டு விட்டு – நம் இன ஒற்றுமை மற்றும்
இயற்கைவளம் சீரழியாமல் இதயம் வைத்து காப்பதே நம் கடமையாகும்!..
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம் குடியரசு!!
குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!