PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம்.

எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்தர திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.

மீனாட்சி கல்யாணம்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும்.

சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.

இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.

SARASWATHY POOJAI HISTORY IN TAMIL | சரஸ்வதி பூஜை வரலாறு

பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர்.

பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு
PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு

பங்குனி உத்திரம் 2024

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: பங்குனி உத்திரம் 2024 மார்ச் 25 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. மேலும், பங்குனி உத்திரம் 2024 நேரம் மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது.

அங்கு உத்திரம் நட்சத்திரம் திதி மார்ச் 24 ஆம் தேதி காலை 07:35 மணிக்கு தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி காலை 10:38 மணிக்கு முடிவடைகிறது.

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL – அசுரனை வீழ்த்திய நாள்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார்.

அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும்.

அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார்.

To Know About – rasi palan today

சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.

அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது.

இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான்.

இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.

எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.

தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார்.

துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு
PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு

பங்குனி உத்தரம்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும்.

அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.

திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள்.

பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு
PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு

பங்குனி உத்திரம் விரத இருக்கும் முறை

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: இதனால் பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் காலை பிரம்ம முகூர்த்தத்திலேயே பூஜைகளை செய்து விடலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.

பூஜை செய்வதற்கு அதி விசேஷமான நேரமாக காலை 10.30 – 11.30 மணி வரை சொல்லப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பவர்கள் ஒரு ஜாக்கெட் பிட், பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் வைத்து வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் சுமங்கலி பெண்கள் எத்தனை பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு கொடுக்கலாம்.

திருமண விரதம்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்ணோ, பையனோ அவர்கள் கையால் கொடுக்க வேண்டும். அவர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், காலையிலேயே பூஜை அறையில் அந்த பொருட்களை வைத்து வணங்கி விட்டு, சிறிய பைகளில் அவர்கள் கைகளால் போட்டு எடுத்து வைத்து விடலாம். பிறகு அவர்கள் சார்பாக அவர்களின் அப்பாவோ, அம்மாவோ, உடல் பிறந்தவர்களோ மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.

நைவேத்தியம்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: திருமணம் ஆக வேண்டும் என வேண்டிக் கொண்டு விரதம் இருப்பவர்கள் அல்லது வேண்டுதல் ஏதும் இல்லாமல் சாதாரணமாக முருகனின் அருள் வேண்டி பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் போன்ற ஏதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

முடியாதவர்கள் காய்ச்சிய பால் மட்டும் வைத்து அதோடு தேன், சர்க்கரை கலந்து, பழம், வெற்றிலை, பாக்கு வைத்து படைக்கலாம். அரசு வேலை கிடைக்க வேண்டும்.

பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருப்பவர்கள் கோதுமையால் ஆன உணவுப் பொருட்களான கோதுமை பாயசம், கோதுமை பொங்கல் போன்றவை செய்து நைவேத்தியமாக படைத்து, அதை மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு
PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு

பங்குனி உத்திரமும் அதன் சிறப்புகளும்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவது வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு.

இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத்திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 12-வது மாதமான பங்குனியும், 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம் இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்.

பங்குனியில் நடந்த தெய்வ திருமணங்கள்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர்.

சிவனின் தவத்தைக் கலைத்தால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்றான்.அதுவும் இந்தநாளில்தான்.

அதுமட்டுமல்லாமல் முருகன் தெய்வானையை இந்த நாளில் தான் திருமணம் புரிந்து கொண்டார். அத்துடன் வள்ளியின் அவதார தினமும் இதுதான்.

பர்வத ராஜன் தவத்தால் பத்மத்தில் அவதரித்த பார்வதியை சிவபெருமான் கரம் பிடித்த நாளும் இதுவே. ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்த நாளும் இதுதான்.

மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள். மகாலட்சுமியின் அவதார நாளும் பங்குனி உத்திர நாள்தான்.

இந்நாளில் வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சிவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி பூதேவி, மலையாள நாச்சியார் ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார்.

காஞ்சியில் காமாட்சி – ஏகாம்பரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள். தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- கலைவாணி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

தசரத மைந்தர்கள் ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அழகுமிகு 27 கன்னியர்களை சந்திரன் மனைவிகளாக ஏற்றுக் கொண்ட தினமும் இதுதான்.

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு
PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு

பெண்களுக்கு திருமணம் வரம் தரும் விரதம்

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம் தான். அது போல திருமழப்பாடியில் நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான்.

விளக்கு பூஜை

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL: பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறு பிறவி தெய்வத் பிறவியாக அமையும்.

Leave a Comment