TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL: தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.

ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.

TAMIL NEW YEAR HISTORY IN TAMIL | TAMIL PUTHANDU WISHES | தமிழ்ப் புத்தாண்டு வரலாறு

தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன.

பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு “கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.

இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். பொ.பி. 1310-ல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய “சரசோதி மாலை” எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், பொ.பி. 1622-ம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL: மகிழ்ச்சி நிறைந்த மங்கலகரமான தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. சித்திரையில் தொடங்கப்படும் பணிகள் வெற்றிகரமாக அமையும் என்பதே நம்பிக்கை. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கே உள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் ஆகியவற்றை உபயோகித்து ஷேர் செய்யலாம்.

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

 

மங்கலங்கள் நிறைந்த, மகிழ்ச்சி நிறையட்டும், புது மாற்றங்கள் மலரட்டும் சோகங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கட்டும், இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அன்பான வாழ்க்கை, ஒற்றுமையான குடும்பம், நிம்மதியான வேலை, ஆரோக்கியம் நீடித்திருக்க. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

இனிய நினைவுகளுடன் கடந்தது, இறைவனின் ஆசியுடன், புத்தாண்டு இனிதே உதயமாகட்டும், அன்பும் மகிழ்ச்சியும் நிறைய இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சித்திரை 1 சிறப்புடன் பிறந்தது, சிந்தனையில் தெளிவும், மனதில் ஒளியும், வாக்கில் இனிமையும், எண்ணங்களில் நன்மையும், மகிழ்ச்சி நிறைந்த சோபகிருது. தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும், நினைத்தது இனி நிறைவேறும், நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த பொற்காலம் பிறக்கட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அனைத்து தமிழ் மக்களுக்கும் மங்களகரமான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்வும் வளமும் பெருகட்டும்..

கலை, இலக்கியம், கலாச்சாரம், வீரம் என எல்லாவற்றிலும் சிறந்த தமிழ் மக்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.

TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024
TAMIL NEW YEAR WISHES 2024 IN TAMIL | தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024

 

தமிழ் முதல் தலைவர் வரை தமிழ்நாட்டின் அடையாளம்தான். அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Leave a Comment