VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL | வைகுண்ட ஏகாதசி வரலாறு

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது மார்கழி மாதத்தில் வரும்.

வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர்.

PANGUNI UTHIRAM HISTORY IN TAMIL | பங்குனி உத்தரம் வரலாறு

விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் “சொர்க்க வாயில்” என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் “பகல்பத்து” என்றும் பிந்தைய பத்து நாட்களில் “இராப்பத்து” என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

சமய நம்பிக்கை

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர்.

விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது.

புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும், இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.

மகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருட்டிணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது.

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL | வைகுண்ட ஏகாதசி வரலாறு
VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL | வைகுண்ட ஏகாதசி வரலாறு

திருவரங்கத்தில்

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது.

To Know About – Tamil Jathagam

ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் (“பரமபத வாசல்”, சொர்க்க வாசல்” என்றும் அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

திருமலையில்

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் “வைகுண்ட துவாரம்” என அழைக்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்.

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL | வைகுண்ட ஏகாதசி வரலாறு
VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL | வைகுண்ட ஏகாதசி வரலாறு

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL – ஏகாதசி விரதம் உருவான கதை

பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மொத்தம் 15 திதிகள் உள்ளன. ஆனால் இவற்றில் ஒரு சில திதிகள் மட்டுமே அதிக சிறப்பு மிக்கதாகவும், அந்த நாட்களில் விரதம் இருந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த திதிகள் அனைத்திலும் சிறப்பான இடம் ஏகாதசி திதி உண்டு. இந்த திதிக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு, யார் இந்த ஏகாதசி என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

யார் இந்த ஏகாதசி ?

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். அவர்கள் தங்களை காப்பாற்றும் படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன் விஷ்ணு போரிட்டு வெற்றி பெற்றார்.

பிறகு சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முரன், பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள்.

பெருமாள் தந்த வரம்

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார் பெருமாள். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் வரமளித்தார்.

அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி திதி விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுவதால், ஏகாதசி தினத்தில் விரதம் இருந்தால் திருமாலின் அருளை முழுவதுமாக பெற முடியும்.

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL | வைகுண்ட ஏகாதசி வரலாறு
VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL | வைகுண்ட ஏகாதசி வரலாறு

வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பது எப்படி?

  • VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட வேண்டும்.
  • ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.
  • ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.
  • விரதத்தின்போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.

விரத முறைகள்

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம் பெற வேண்டும்.

துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது.

பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் விரதம் மேற்கொள்ள வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: வைகுண்ட ஏகாதசி என்றாலே இரவு விழித்திருப்பது என்பது பிரசித்தம். உறங்காமல் இருந்தால் மட்டும் போதாது. பெருமாளை நினைத்து பஜனை செய்ய வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி வைபவமே தமிழ் மறைகளான நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். அப்படிப்பட்ட அந்த வைபவத்தில் நாம் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைப் பாடிப் பெருமாளை வழிபடுவது விசேஷம்.

பாசுரங்கள் பாடத் தெரியாது என்பவர்கள் ராமா, கிருஷ்ணா, நாராயணா என்று தெய்வ நாமங்களை ஜபம் செய்து கொண்டிருந்தாலே போதுமானது. அதிகாலை வேளையில் ஹரிநாம ஜபம் செய்வதன் மூலம் பெருமாளின் அருளுக்குப் பாத்திரர் ஆகலாம்.

ஏகாதசி நாளில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். பொதுவாக தசமி நாளில் இருந்தே விரதம் தொடங்கிவிடும். தசமி இரவு உணவைத் தவிர்த்துவிடவேண்டும். மறுநாள் ஏகாதசி நாளில் முற்றிலும் ஆகாரம் இல்லாமல் இருப்பது உத்தமம். துளசித் தீர்த்தம் சாப்பிடலாம்.

முடியாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் அரிசியை பின்னம் செய்து தயாரிக்கப்படும் கஞ்சி, உப்புமா போன்றவற்றை சாப்பிடலாம். பழங்கள், பால் ஆகியவற்றை பெருமாளுக்கு நிவேதனமாக சமர்ப்பித்து அதை எடுத்துக்கொள்வது விசேஷம்.

மறுநாள் துவாதசி அன்று காலை பெருமாளை தரிசனம் செய்து பின் துளசி தீர்த்தம் அருந்தி உணவெடுத்துக்கொள்ள வேண்டும் என்பார்கள். இதற்குப் பாரனை என்று பெயர்.

வைகுண்ட ஏகாதசி அன்று கட்டாயம் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு. இதன் மூலம் மனமும் உடலும் புத்துணர்ச்சி கொள்ளும். அவ்வாறு பெருமாள் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் வீட்டில் அதிகாலையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளுக்கு துளசி சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும்.

பகலில் உறக்கம் கூடவேகூடாது. இரவெல்லாம் விழித்திருந்தோமே என்று சொல்லிப் பகலில் உறங்குவது முறையல்ல. பகலிலும் இறைவழிபாட்டிலேயே செலவிட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பலரும் அலுவல் காரணமாகப் பணிக்குப் போக வேண்டிய சூழல் நிலவுகிறது.

எனவே முழு நேரமும் இறைவழிபாடு செய்துகொண்டிருக்க முடியாது. ஆனால் தவறாமல் சந்தி வேளைகளான நண்பகல், பிரதோஷ வேளைகளில் இறைவனை நினைத்து மனதுக்குள் வழிபட வேண்டியது அவசியம். மனம் ஒன்றிச் செய்யும் சில நிமிட வழிபாடு நமக்குப் பெரும்பலனைத் தரும்.

மறுநாள் துவாதசி அன்று பாரனை முடிந்து உணவருந்தும் முன்பாக தானம் செய்வது சிறப்பு. துவாதசி அன்று தன் வீட்டு வாசலுக்கு வந்து பிக்ஷை கேட்ட ஆதிசங்கரருக்குக் கொடுக்க ஏதும் இல்லையே அன்று வருந்தித் தன்னிடம் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை தானம் செய்தாள் ஒரு பெண்.

அந்தப் பெண்ணின் வறுமையை உணர்ந்த சங்கரர், கனகதாரா ஸ்தோத்திரம் பாட அன்னை மகாலட்சுமி பொன்மாரிப் பொழிந்தாள். இது உணர்த்தும் செய்தி, துவாதசி அன்று கட்டாயம் தேவையிருப்போருக்கு தானம் செய்ய வேண்டும் என்பதுதான். அவ்வாறு செய்யும்போது இறைவனின் அன்புக்கும் கருணைக்கும் உரியவர்களாக நாம் ஆவோம்.

வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்?

VAIKUNTHA EKADASHI HISTORY IN TAMIL: னமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம். ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக் கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.

மேலும், 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். துளசி இலை வெப்பம் தரக் கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.

முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம். முக்கியமாக பயித்தம் பருப்பால் செய்த கஞ்சி பெருமாளுக்கு விசேஷம். எனவே அதை செய்து இறைவனுக்குப் படைத்து விட்டு நாமும் பருகலாம்.

இரவு முழுவதும் கண்விழித்து புராண நு}ல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலையில் 21 வகை காய்கறிகள் உணவில் இடம் பெற வேண்டும். இதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை பாரணை என்கிறார்கள். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகலிலும் உறங்கக்கூடாது. ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவதாகிய ஏகாதசி, பனிரெண்டாம் திதியாகிய துவாதசி என்று மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது.

வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மேலும், சகல சௌபாக்கியங்களையும், ஆரோக்கியமான உடல்நலத்தையும் பெறுவார்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலை அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படுவது வழக்கம். சொர்க்க வாசல் வழியே செல்பவர்கள் பாவம் தீர்ந்து சொர்க்கம் சென்றடைவார்கள் என்பது ஐதீகம்.

Leave a Comment