THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024

THAIPUSAM 2024: தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.

தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.

நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. இது கேரளாவில் தைப்பூயம் (തൈപൂയം) என்று அழைக்கப்படுகிறது.

THAIPUSAM 2024 | தைப்பூச சுப முஹூர்த்தம் 2024

 • தைப்பூசம் 2024 தேதி – வியாழன், ஜனவரி 25, 2024
 • பூசம் நட்சத்திரம் ஆரம்பம் – ஜனவரி 25, 2024 அன்று காலை 08:16 மணிக்கு
 • பூசம் நட்சத்திரம் முடிவடைகிறது – ஜனவரி 26, 2024 அன்று காலை 10:28 மணிக்கு

தைப்பூசத்தின் பழமை

THAIPUSAM 2024: தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகளுள்ளன.

குறிப்பாக பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். பிற்கால சோழர் ஆட்சியில் தைபூசத்தன்று கோயில்களில் கூத்துகள் நடத்தபட்டன. குறிப்பாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

தைப்பூசம் தோன்றிய கதை

THAIPUSAM 2024: சிவ பெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் சிவ பெருமான் அரங்கேற்றினார். இந்த நடனத்தை பார்வதி தேவியும் ரசித்துக் கொண்டிருந்தார்.

சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்ட சிவகாமிக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது. சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர்.

REPUBLIC DAY 2024 WISHES IN TAMIL | குடியரசு தின வாழ்த்துக்கள் 2024

முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையையும் நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும்.

சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என கொண்டாடப்பட்டது. அதனால் இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாக மாறியது. இந்த நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம் பழனி தான்.

THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024
THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024

சிறப்புகள்

THAIPUSAM 2024: ஜோதி வடிவான ராமலிங்க அடிகள் தைப்பூசத் திருநாளன்று இறைவனோடு சேர்ந்த தினமே இந்த தைப்பூசத் திருநாள் ஆகும். வடலூரில் ஏழு திரைகளை நீக்கி பக்தர்களுக்கு ஜோதி தரிசனம் காட்டப்படும்.

இது காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் அங்குக் கூடுவார்கள். இந்த தைப்பூசத் திருநாளில் மட்டுமே ஏழு திரைகளும் முழுமையாக நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்ட திருநாள் இந்த தைப்பூசத் திருநாள் என்பது நம்பிக்கையாகும். எனவே திருமணமாகாதவர்கள் இந்நாளில் விரதம் இருந்து மனமுருக வேண்டி வழிபட்டால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகமாகும்.

தைப்பூசம் எதற்காக கொண்டாடுகிறோம்?

THAIPUSAM 2024: அது ஸ்கந்தனின் கதை. புராணங்களின் கூற்றுப்படி, ஸ்கந்தனுக்கு தைப்பூசத்தன்று அவனது ஆயுதம் கிடைத்ததால், அவன் வெற்றிகரமாக இருந்தான். இறுதியில், அவனது நோக்கம் சரியல்ல என்ற உணர்தலை அவன் அடைந்தான்.

அவன் தன் நோக்கத்தில் தோல்வியடைந்ததால். உலகின் மற்ற எந்த நிலப்பகுதியாக இருந்திருந்தாலும் அவன் தோல்வியடைந்த ஒருவனாகத்தான் கருதப்பட்டிருப்பான்.

ஆனால் இந்தக் கலாச்சாரத்தில், பொருள்ரீதியான விஷயங்களையோ, அவன் அடைந்த வெற்றிகளின் எண்ணிக்கையையோ அல்லது அவனது நோக்கம் முழுமை பெறாமல் போனதையோ கருதாமல், அவன் தன்னையுணர்ந்த பேருண்மையை, ஒரு மகத்தான வெற்றியாக நாம் கருதுகிறோம். தென்னிந்தியா முழுவதும் அவனது தந்தை சிவனைவிட, இவனை அதிகமாக வழிபடுகின்றனர்.

வெற்றியடைதல் குறித்த நமது கருத்து, கைப்பற்றுவது அல்ல. வெற்றி குறித்த நமது கருத்து என்னவென்றால், விரிவடைந்து நம்மை நாமே கரைத்துக்கொள்வது. இது பக்தி விளைந்த மண்.

பக்தியின் இலக்கு கரைந்துபோவது. கரைதலுக்கான ஒரு வழியாக நாம் வேறு ஏதோ ஒரு பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால் பக்தியின் அடிப்படையான நோக்கம் கரைந்துபோவது.

ஒரு புனிதயாத்திரையைத் தொடங்குவதற்கு, தைப்பூசம் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இயன்றவரை ஒவ்வொரு வழியிலும் நம்மை நாமே குறைத்துக்கொள்வதற்கு புனித யாத்திரை, ஒரு செயல்முறையாக இருக்கிறது.

THAIPUSAM 2024: தமிழ்நாட்டின் பழனிமலை மீதும், மற்றும் பல இடங்களிலும் இருக்கும் முருகன் கோவிலுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் பாதயாத்திரை செல்லும் மக்களைக்கொண்ட, துடிப்பான புனிதயாத்திரைக் கலாச்சாரம் இன்னமும் தென்னிந்தியாவில் இருக்கிறது.

THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024
THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024

தைப்பூச விரத முறை

THAIPUSAM 2024: தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும். மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.

பழனியில் (இந்தியா) தைப்பூசம்

THAIPUSAM 2024: பழனி (திருவாவினன்குடி – சக்திகிரி) முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும்.

மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார். இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும்.

முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள்.

பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன.

திருச்செந்தூரில் (இந்தியா) தைப்பூசம்

THAIPUSAM 2024: கடற்கரை தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதையாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர்.

பெரும்பாலோனோர் மாட்டு வண்டி அல்லது டெம்போ வண்டி பிடித்து பாடல் கட்டி கூட்டம் கூட்டமாக நடந்து வருகிறனர். வண்டியை மின் விளக்குகளால் அலங்கரித்து முருகப்பெருமானை மலர்களால் அலங்கரித்து வண்டியிலேற்றி வண்டி முன் செல்ல விரதமிருந்தவர்கள் பின்னால் நடந்து வருகின்றனர். ஆடலும் பாடலுமாய் திருச்செந்தூர் நோக்கி விரைகின்றனர்.

THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024
THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024

காவடி வகைகள்

 1. அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
 2. சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
 3. தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
 4. பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
 5. பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
 6. மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
 7. மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
 8. சந்தன காவடி – உடம்பு முழுவதும் சந்தனம் பூசி வருதல்
 9. சர்ப காவடி – நல்ல பாம்பை இறைவனுக்கு அர்பணிப்பது
 10. சேவற் காவடி – சேவலை இறைவனுக்கு அர்பணிப்பது
 11. அன்னக் காவடி – இறைவனுக்கு சோறு படைத்தல்
 12. வேல் காவடி – இறைவனுக்கு வேல் கொடுத்தல் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
 13. வாள் காவடி – இறைவனுக்கு வாள் பரிசளித்தல்
 14. விளக்கு காவடி – விளக்கு ஏந்தி வருதல்

Leave a Comment