THAIPUSAM 2024 WISHES IN TAMIL: முருகப் பெருமானின் ஆசி பெற, தைப்பூச திருநாளன்று காவடி எடுத்து, அலகு குத்தி வழிபடுவர். தை மாதத்தில் பௌர்ணமி தினமும், பூச நட்சத்திரமும் ஒன்றாக வருவதைக் கொண்டாடும் விதமாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
இந்த சிறப்பான தினத்தில், முருகப் பெருமான் மட்டுமல்லாமல், சிவபெருமானுக்கும் உரிய அற்புத தினமாக அமைகிறது. இந்த சுப தினத்தில், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் முருகனின் ஆசி பெறுவதற்கு இந்த இனிய நாளிற்கான வாழ்த்துக்களைப் பகிரலாம்.
தைப்பூசம் தோன்றிய கதை
THAIPUSAM 2024 WISHES IN TAMIL: சிவ பெருமான், நடராஜராக தனித்து ஆனந்த தாண்டவம் ஆடிய நாள், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை. இந்த நடனத்தை பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்காக சிதம்பரத்தில் சிவ பெருமான் அரங்கேற்றினார். இந்த நடனத்தை பார்வதி தேவியும் ரசித்துக் கொண்டிருந்தார்.
சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்ட சிவகாமிக்கும் அதே போன்று தாண்டவமாட ஆசை வந்தது. சிவ பெருமானைப் போன்று அன்னையின் நடனத்தையும் காண பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் ஆர்வம் கொண்டனர்.
THAIPUSAM 2024 | தைப்பூசம் 2024
முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்டோரின் ஆசையையும் நிறைவேற்ற எண்ணிய அம்பிகை ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் தைப்பூச திருநாளாகும்.
சிவ பெருமான் ஆனந்த தாண்டவம் நிகழ்த்திய நாள் திருவாதிரை என கொண்டாடப்படுவதை போல், அம்பாள் நடனமாடிய திருநாள் தைப்பூசம் என கொண்டாடப்பட்டது. அதனால் இந்த நாள் அம்பிகை வழிபாட்டிற்குரிய நாளாக மாறியது. இந்த நாள் முருகனுக்குரிய திருநாளாக மாறிய தலம் பழனி தான்.

THAIPUSAM 2024 WISHES IN TAMIL | இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள் 2024
முருகப்பெருமான்
அருள் மற்றும் ஆசியுடன்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
வீர வேல் முருகனுக்கு அரோகரா.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
வேல் உண்டு வினை இல்லை.
வினை தீர்க்க நீ உண்டு
பயம் இல்லை.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
வேல் உண்டு வினை இல்லை!
மயில் உண்டு பயம் இல்லை!
குகன் உண்டு குறை இல்லை!
கந்தன் உண்டு கவலை இல்லை!
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
யாமிருக்க பயமேன்
அனைவருக்கும்
இனிய
தைப்பூசம் வாழ்த்துக்கள்

தமிழர் வாழும் நாடுகளில்
தைப்பூசத்தை கொண்டாடாத நாடில்லை.
உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கு
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
தைப்பூச தினத்தன்று உங்கள்
ஆசை கனவு எண்ணங்களை
நினைத்து வழிபட்டிட அனைத்தும் ஈடேறும்.
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
தமிழர் வாழும் நாடுகளில் தைப்பூசத்தைக் கொண்டாடாத நாடில்லை. அனைவருக்கும் இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்..!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகராகரா…!
முருகனின் ஆசியுடன், உங்கள் ஆசை, கனவு நிறைவேற வேண்டி அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்..!
வேல் உண்டு வினையில்லை..
மயில் உண்டு பயன் இல்லை.!
குகன் உண்டு குறை இல்லை…
கந்தன் உண்டு கவலை இல்லை..!
இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்!
வேல் வேல் வடிவேல்
வேதாந்த வடிவேல்
நாதாந்த முனியும்
நான்மறையும் போற்றும் வேல்
தேவி அவள் தந்த வேல்
தேவர் மூவர் போற்றும் வேல்
குழந்தை குமார வேல்
குன்றுதோரும் நின்ற வேல்.!
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்..!
முருகப் பெருமான் அருள் ஆசியுடன், இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.!
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்!