TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: தமிழ்ப் புத்தாண்டு (Puthandu அல்லது Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும்.
சூரிய மேச இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
THAIPUSAM 2024 WISHES IN TAMIL | தைப்பூசம் வாழ்த்துக்கள் 2024
ஆங்கில கிரெகொரிய நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.
நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL | வரலாறு
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார்.
ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை.
தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன.
பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் “தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை” என்றும், பழமொழி நானூறு “கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்” என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள்.
இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். பொ.பி. 1310-ல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய “சரசோதி மாலை” எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், பொ.பி. 1622-ம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம்.
தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
இப்படி எல்லாம் பாரதிதாசன் பாடல்களுடன் தை முதல்நாளே என பல்லவி பாடுவது உண்டு.
அதேநேரத்தில் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்கிற பாரதிதாசன்,
சித்திரை வைகாசி ஆணி ஆடி ஆவணி
புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி
ஒத்து வரும் தை மாசி பங்குனி எல்லாம் – இவை
ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர் என சித்திரையை தொடக்கமாகவே வைத்து ஏன் எழுதினார் என்கிற எதிர்வாதம் வைப்பதும் உண்டு.
இவர்களுக்கு அப்பால் சாலிவாகனன் என்ற வடநாட்டான் உருவாக்கியதுதான் இந்த சித்திரை ஆண்டுப் பிறப்பு என்பதும் 60 ஆண்டுகள் பிறந்த சோ கால்ட் ஆன்மீக வரலாறு அதாவது அபிதான சிந்தாமணி போன்ற நூல்களில் எழுதப்பட்ட 60 ஆண்டுகால வரலாறு என்பது அறிவியலுக்கும் தமிழர் வாழ்வியலுக்கும் பொருந்தா ஆபாசக் கதைகள் என திரவிடர் கழகத்தார் ஆணித்தரமாக வாதிடுவதும் தமிழர் நிலத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
செய்ய வேண்டியவைகள்
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் கொண்ட தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை படைப்பது முறையாகும்.
அன்றைய நாளில் இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்குமாறு உணவானது அமைவது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை. ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம் ஆகும்.
அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவு புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது. சித்திரை மாத பிறப்பு என்பதால் கோடை காலத்தின் துவக்கத்தில் இருக்கிறோம். கோடை காலத்திற்கு உகந்த தானங்களை எல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் செய்வது நல்லது.
தோஷங்கள் நீங்கி வாழ்வு மலர உங்களால் முடிந்த அளவிற்கு குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். மேலும் நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவை செய்வதால் உங்களுடைய கர்மாக்கள் அனைத்தும் தீரும். பறவைகளுக்கு, விலங்குகளுக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் வைப்பதும் சிறப்பு.
தமிழ் புத்தாண்டு அன்று இறை வழிபாடுகளில் ஈடுபடுவதும் உங்களை மென்மேலும் வளர செய்யும். இளநீர், நுங்கு, விளாம்பழம், தர்பூசணி போன்ற குளிர்ச்சி மிகுந்த பழங்களை வாங்கி தானம் செய்வதும், நீங்கள் சாப்பிடுவதும் மிகவும் நல்லது.
தமிழ் புத்தாண்டு அன்று கடைக்கு சென்று நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்குவது மென்மேலும் அவைகள் பெருக செய்யும். அதுபோல கல் உப்பு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவதும் குடும்பத்தில் மென்மேலும் லட்சுமி கடாட்சத்தை உண்டு செய்யும்.
செய்யக்கூடாதவைகள்
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: அசைவம் சாப்பிடுவது, நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களை இந்நாளில் கட்டாயம் செய்யவே கூடாது.
வீட்டில் இருக்கும் போது ஒட்டடைகளை அகற்றக் கூடாது. வீட்டில் சேகரித்து வைக்கும் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது. புதிய பொருட்களை வாங்கலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை அன்றைய தினம் யாருக்கும் கொடுக்கக் கூடாது.
மேலும் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கடன் வாங்கவும் கூடாது. தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டியவைகளை செய்து, செய்ய தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து வளமாக வாழ தமிழ் அன்னையை வணங்குவது சிறப்பு.
மரபுகள்
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.
வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர்.
அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது.
போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.
தமிழ் புத்தாண்டு சர்ச்சை
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: சில காரணங்களைச் சுட்டிக் காட்டி தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின் மீண்டும் அதிமுக அரசு பதவிக்கு வந்ததும், ஆட்சியாளர்கள் 2011இல் தை மாதத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக கொண்டாடப்படும் என சில காரணங்களை முன் வைத்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தை 1ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது. அதோடு தை பொங்கலுக்கு கொடுக்கப்படும் பரிசு பொருட்கள் அடங்கிய பையில் ‘இனிய தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு சர்ச்சை எழுந்தது எப்படி?
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: 1970,80 காலங்களில் தமிழ் புத்தாண்டு தமிழர்களின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக் கருத்து எழுந்தது. இதற்கு முக்கிய காரணமாக தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு 1981ல் மதுரையில் நிகழ்ந்த உலக தமிழ் மாநாட்டில் ஆவணங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதே முக்கிய காரணமாகும்.
சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டு?
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று என்று நியமிக்கப்பட்ட இருந்ததை, தை 2ம் தேதிக்கு மாற்றப்பட்டதே இந்த பிரச்னை ஆரம்பிக்கக் காரணமாக மாறியுள்ளது.
ஆதாரங்கள் இல்லையா?
TAMIL NEW YEAR HISTORY IN TAMIL: 1921ம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் குழு ஆய்வு செய்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதில் ஒரு சாரார் தமிழ் சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டு பிறப்பதாகச் சொல்லப்படும் 60 ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர்கள் இல்லை என்று கூறினர்.