PONGAL WISHES 2024 IN TAMIL: பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
தைப்பொங்கல் வரலாறு
PONGAL WISHES 2024 IN TAMIL: ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.
PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு
அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும்.
அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும்.

PONGAL WISHES 2024 IN TAMIL / பொங்கல் வாழ்த்துக்கள் 2024
அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்னைத் தமிழ் மணம் பரப்பி வாழ்ந்திட வாழ்த்துகிறோம் !
அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு திகட்டாத கரும்பு போல இனிக்கட்டும் மனிதனின் மனது அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
தை பிறந்தால் வழி பிறக்கும்; தடைகள் தகரும்; தலைகள் நிமிரும்; நிலைகள் உயரும்; நினைவுகள் நிஜமாகும்; கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும்; அவலங்கள் அகலும்! இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
இல்லம் எனும் பானையில் பாசம் என்னும் பாலூற்றி.. அன்பெனும் அரிசி இட்டு.. நேசம் என்னும் நெய் ஊற்றி… இன்பம் என்னும் இனிப்பிட்டு உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!!

நோயற்ற சுகத்தை பெற்று மாசற்ற செல்வதை பெற்று அன்புடைய சுற்றத்தை பெற்று இதயத்தில் இன்பத்தை பெற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.. இனிய தை திருநாள் நல்வாழ்த்துகள்!!
வெல்லம், பால் மற்றும் உலர் பழங்களின் இனிப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிமையான வாழ்க்கையை தரட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்…
பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும் இல்லத்தில் அன்பும், அறனும் பெருகட்டும், இன்றுபோல் என்றும்! மனமார்ந்த தைத்திருநாள் வாழ்த்துகள்!

தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க.. பொங்கல் வாழ்த்துகள்!
பொங்கல் திருநாளில் மனநிறைவு பொங்கட்டும், நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும் உங்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்து வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
வீட்டைப் புதுப்பிக்கும்போது, உங்கள் வாழ்க்கையை அதிக மனநிறைவோடும், சிரிப்போடும், நல்ல ஆரோக்கியத்தோடும் புதுப்பிக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

பயிர்த் தொழில் என்பது உயிர்த் தொழிலாம்.. உழுது உழைப்போரும் உறுதுணை நிற்ப்போரும் உண்டு களிப்பொரும் வந்தனை செய்து சூரியனை நன்றி சொல்வோம்!! தரணி செழிக்க.. பொங்கலோ பொங்கல்!!!
எங்கோ ஒருவரின் உழவால் நம் உணவு நிச்சயமாகின்றது! ஏர் கலப்பை பூட்டி உழவு செய்து, உணவளித்து உயிர் காக்கும் அனைத்து உழவர்களுக்கும் துணை உழவரகளான காளையர்களுக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!!
மஞ்சள் கொத்தோடு, மாமரத்து இலையோடு, இஞ்சித் தண்டோடு, எறும்பூரும் கரும்போடு, வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க, பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது! பொங்கல் வாழ்த்துகள்!

இந்த இனிய திருநாளில் இறைவனை வணங்கி, பொன், பொருள், மகிழ்ச்சி இவ் அனைத்தும், அரும்சுவை பொங்கல் போல் உங்கள் வாழ்க்கையில் பொங்கிட, என் மனமார்ந்த பொங்கல் மற்றும் தைத் திருநாள் வாழ்த்துகள்!
சூரியன் தன் ஒளிக் கற்றை, இந்த பூமியின் மீது செலுத்துவதைப் போன்று, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்! பொங்கல் வாழ்த்துகள்
அன்பும், ஆசையும் பொங்க, இன்பமும், இனிமையும் பொங்க உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கள் நல்வாழ்த்துக்கள்..
அறுவடைத் திருநாள், இனிய பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் பெருகி, நலமும், வளமும் பெருகட்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
இந்த பொங்கல் உங்கள் எல்லாருடைய வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும். பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தித்திக்கும் கரும்பை போல உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்கட்டும். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இந்த தைத்திருநாளில் நாம் உண்ண உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும் உழவர்களுக்கும் வாழ்த்துக்கள். சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கலை போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்!
எல்லாருடைய வாழ்விலும்
தீமைகள் விலகி
நன்மைகள் பெருகிட
போகி பண்டிகை வாழ்த்துக்கள்!
தைத்திருநாளில் வளமுடன் வாழ, அன்பு பொங்க உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பழையன கழிந்து
புதியன புகுந்திட
தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க.. பொங்கல் வாழ்த்துக்கள்!
வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு
தமிழா அதை நீ வென்று காட்டு
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!