PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு

PONGAL FESTIVAL IN TAMIL: பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

தைப்பொங்கல் வரலாறு

PONGAL FESTIVAL IN TAMIL: ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும்.

அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும்.

PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு
PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு

HARVESTING FESTIVAL OF TAMIL NADU | தமிழ்நாட்டின் அறுவடைத் திருவிழா

செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும்.

பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்.

பொங்கல் விழா, உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பயிர்கள் செழிக்கவும் விளைச்சல் பெருகவும் கதிரவனே முதன்மைக் காரணமாக விளங்குகிறான்.

எனவே, உழவர் பெருமக்கள் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகை போகி, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாடப்பட்டு வருகிறது

போகிப் பண்டிகை

PONGAL FESTIVAL IN TAMIL: இப்பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது.

பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம். பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும்.

மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம். ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.

அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

பயனற்ற பழைய பொருள்களையும் மனித மனத்தில் உள்ள தேவையற்ற எண்ணங்களையும் போக்குவதே போகிப்பண்டிகையின் நோக்கமாகும். இப்பண்டிகை நாளன்று வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டின் தலைவாசல் உள்ளிட்ட நிலைக்கதவுகளுக்கு மஞ்சளும் சந்தனமும் பூசுவர்.

அன்றைய மாலைப் பொழுதில் வாசற் கூரையில் வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ ஆகியவற்றைக் கொண்டு காப்புக் கட்டினர்.

PONGAL FESTIVAL IN TAMIL – பொங்கல் திருநாள்

PONGAL FESTIVAL IN TAMIL: உழவர் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களை தை மாதம் அறுவடை செய்வர். முதல் விளைச்சலை கதிரவனுக்குக் காணிக்கையாகப் படைப்பதே பொங்கல் திருவிழா ஆகும்.

பொங்கல் அன்று பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்துமே புதியனவாக இருக்க வேண்டும் என்பதற்காகப் புதிய கற்களாலான அடுப்பு, புதிய மண்பானை, புதிய அகப்பை, தூயபசுஞ் சாணத்தாலான வறட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள்.

வீட்டு வாசலில் பொங்கலிடும் இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலம் இடுவார்கள். அன்றலர்ந்த மலர்களையே வழிபாட்டிற்குப் பயன்படுத்துவார்கள். பொங்கல் வைக்கும் பானையை மஞ்சள் குங்குமம், இஞ்சி, மஞ்சள் கொத்து ஆகியவற்றால் அலங்கரிப்பர்.

புதிதாக அறுவடை செய்த நெல்லை பச்சரிசி பின் வெல்லம் கற்கண்டு, நெய், பால், முந்திரி, திராட்சை முதலியவற்றைக் கொண்டு பொங்கல் இடுவர். தங்கள் விளைநிலங்களில் விளைந்த செங்கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி, கருணைக்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துக் கதிரவனுக்கு வைத்து வழிபடுவார்கள்.

PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு
PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு

மாட்டுப் பொங்கல்

PONGAL FESTIVAL IN TAMIL: உழவுக்கு உழவனுக்கும் உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும் பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அலங்கரித்து அவற்றுக்குப் பொங்கலைக் கொடுத்து மகிழ்வர். இதனைத்தொடர்ந்து, மாலையில் மஞ்சுவிரட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு விழா’ நடைபெறும். அப்பொழுது, இளைஞர்கள் காளைகளை அடக்கித் தனது வீரத்தை வெளிப்படுத்துவர்.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்

என்ற சங்க இலக்கியப் பாடல் மூலம் இவ்வீரவிளையாட்டின் தொன்மையை அறியலாம். பழங்காலத்தில் கால்நடைகளே நமது செல்வத்தின் அடையாளமாகத் திகழ்ந்த ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன.

ஏரின் பின்னால் தான் உலகமே சுழல்கிறது’ என்கிறார் வள்ளுவர், அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே. இதன் மூலம் மாடுகளே உழவர்களை உயிர்ப்போடு வைத்துள்ளன என்று கூறினாலும் மிகையாகாது.

PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு
PONGAL FESTIVAL IN TAMIL | பொங்கல் பண்டிகை & வரலாறு

காணும் பொங்கல்

PONGAL FESTIVAL IN TAMIL: காணும் பொங்கல், பகைமையை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கும் நாளாகும். அன்றைய தினம் மக்கள் தமது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள பெரியவர்களை வணங்கி வாழ்த்துபெறும் நாளாகும்.

இவ்விழா நாளில் பட்டிமன்றங்கள் நடத்தியும் பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடியும் மகிழ்வார்கள். இவ்வாறு பண்டைய காலம் முதல் இன்று வரை பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்றும், உழவர் திருநாள் என்றும் சிறப்பான முறையில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

PONGAL FESTIVAL IN TAMIL: “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” மற்றும் “தண்ணீர்த் தைஇ நின்ற பொழுதே” என்று நற்றிணை 80 மற்றும் 124ஆம் பாடல்களிலும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்ற குறுந்தொகையின் 196வது பாடலிலும், “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று புறநானூறின் 70வது பாடலிலும், “தைஇத் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறின் 84 வைத்து பாடலிலும், “தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ” என்று கலித்தொகை பாடலிலும் தை மாத நீராடல் பற்றிய குறிப்புகள் உள்ளதால் சங்ககாலம் முதலே தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டதை அறியலாம்.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

Leave a Comment