NAVRATRI HISTORY IN TAMIL: நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும்.
இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது.
நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு
நவராத்திரியானது இந்து மக்களால் எந்த நாட்டில் இருந்தாலும் கொண்டாடப்படும் ஒரு விரத முறை எனலாம். நவராத்திரி விரதங்களும் பல வகைகளைக் கொண்டுள்ளன. இந்த ஒன்பது நாட்களிலும் சிலர் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள், சிலர் பழங்களை சாப்பிடுகிறார்கள், சிலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுகிறார்கள்.
நவராத்திரி விரதத்தின் போது கோதுமை மற்றும் அரிசி போன்ற வழக்கமான தானியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிச்சடி, உப்புமா, தோக்லாஸ் (குஜராத்தி) அல்லது பாயசம் (கீர்) தயாரிப்பதில் அரிசிக்கு பதிலாக சாமை அல்லது தினை, ஜவ்வரிசி (சாபுதானா) உபயோகப் படுதா படுகிறது பயன்படுத்தப்படலாம்.
நவராத்திரி விரதத்தின் போது அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். சிலர் இந்த ஒன்பது நாட்களும் பழங்கள் மற்றும் பால் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள். நவராத்திரி விரதத்தின் போது, பெரும்பாலான மக்கள் காய்கறிகள் – உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி இனிப்பு உருளைக்கிழங்கு, சூரன் கிழங்கு, பூசணி, கீரை, தக்காளி, வெள்ளரி, கேரட் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.
நவராத்திரி விரதத்தின் போது பால் மற்றும் பால் பொருட்கள், உட்கொள்ளப்படுகின்றன. வெங்காயம் அல்லது பூண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவுகள், முட்டை, மது, புகைபிடித்தல் ஆகியவையும் உட்கொள்ளக் கூடாது
தொன்ம நம்பிக்கை
NAVRATRI HISTORY IN TAMIL: மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் = அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான். நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம்.
இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான். இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
நவராத்திரி 2024 தேதிகள்
NAVRATRI HISTORY IN TAMIL: நவராத்திரி 2024 அக்டோபர் 03, வியாழன் அன்று தொடங்கி அக்டோபர் 12, சனிக்கிழமை விஜய தசமி கொண்டாட்டத்துடன் முடிவடையும்.
அக்டோபர் 15, ஞாயிறு அன்று கதஸ்தாபனமும், அக்டோபர் 11, வெள்ளி அன்று துர்காஷ்டமியும், அக்டோபர் 11, வெள்ளி அன்று மகா நவமியும் கொண்டாடப்படும்.
கதஸ்தாபன முஹுரத் நேரம்: அக்டோபர் 15, 11:49 AM – 12:35 PM
பிரதிபத திதி நேரம்: அக்டோபர் 03, 12:19 am – அக்டோபர் 04, 2:58 am
நவராத்திரி விரதம் இருப்பது எதற்கு?
NAVRATRI HISTORY IN TAMIL: உங்கள் இல்லம், கலாச்சாரம் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்களில் விழிப்புணர்வாக பெண்தன்மையை கொண்டுவருவது மிக முக்கியமானது. நீங்கள் இதை முறையாக நடத்திக் கொள்வதற்கு ஏதுவாக இந்த பாரத கலாச்சாரம் பல செயல்முறைகள், சடங்குகள் மற்றும் பல கருவிகளை உருவாக்கியது.
இது நவராத்திரி காலம் என்பது பற்றிய கவனம் உங்களுக்கு இல்லாமல் போகக்கூடும், எனவே இந்த ஒன்பது நாட்களும் மூன்று வேளையும் முழு உணவு உண்பதை தவிர்த்து, விரதம் இரு என்றார்கள்.
வயிற்றில் உணவு இருந்தால், இது என்ன நாள், கிழமை என்பதை நீங்கள் மறந்துவிடுவீர்கள், ஆனால் நீங்கள் உபவாசத்தில் இருந்தால், இந்த நாள் எப்படிப்பட்டது எனும் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.
இப்படியே ஒன்பதாவது நாளை அடைகையில், நீங்கள் மிகுந்த விழிப்புணர்வில் இருப்பீர்கள்! எனவே உங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும், உடலில் குறிப்பிட்ட சுத்திகரிப்பு நிகழவும் நீங்கள் உபவாசம் இருக்க வேண்டியிருக்கிறது.
நவராத்திரி – ஒன்பது தினங்கள், மூன்று தன்மைகள்
NAVRATRI HISTORY IN TAMIL: இந்த மூன்று பரிமாணங்களும் இல்லாமல் எந்தவொரு பொருளும் இல்லை. குறிப்பிட்ட அசைவற்ற தன்மை, ஆற்றல், துடிப்பான அதிர்வு என இந்த மூன்று தன்மைகளிடம் இருந்து விடுபட்டதாக ஒரு அணுவும் இல்லை.
இந்த மூன்று தன்மைகளும் இல்லாமல் உங்களால் எதையும் பிடித்துவைக்க முடியாது, அது உடைந்துவிடும். வெறுமே சத்வ குணமாக இருந்தால், உங்களால் இங்கே ஒரு கணம்கூட இருக்க முடியாது – நீங்கள் போய்விடுவீர்கள்.
வெறுமே ரஜஸ் குணமாக இருந்தால், அது வேலை செய்யப்போவதில்லை. வெறுமே தமஸ் குணமாக இருந்தால், நீங்கள் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பீர்கள். இந்த மூன்று குணங்களும் எல்லாவற்றிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த மூன்றையும் எந்த அளவுக்கு நீங்கள் கலக்கிறீர்கள் என்பது மட்டுமே கேள்வி.
நவராத்திரி விரத நியதிகள்
NAVRATRI HISTORY IN TAMIL: புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.
- வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
- விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
- ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
- விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.
- தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.
- இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.
- நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.
NAVRATRI HISTORY IN TAMIL – நவராத்திரி பண்டிகை உருவானது எப்படி?
NAVRATRI HISTORY IN TAMIL: எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.
இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.
இதன்பின் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.
தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விரத வகைகள்
NAVRATRI HISTORY IN TAMIL: நவராத்திரியில் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், அவரவருக்கு ஏற்றார்போல விரதத்தை கடைபிடிக்கலாம்.
ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது
NAVRATRI HISTORY IN TAMIL: முதலாவது, ஒன்பது நாட்களுமே ஒரே ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். ஒரு சில பெண்கள் காலையில் பூஜை செய்து, மாலையில் பூஜை செய்து முடிக்கும் வரை விரதமிருந்து மாலை பூஜைக்கு பிறகு இரவு நேரத்தில் சாப்பிடுவார்கள். ஒரு சிலர் காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடாமல் ஒரு வேளை உணவு மட்டும் உண்பார்கள்.
நாள் முழுவதும் உபவாசம் இருப்பது
NAVRATRI HISTORY IN TAMIL: ஒரு சில பெண்கள் நவராத்திரி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் மாலை நேரத்தில் பூஜை முடிந்து சுமங்கலிப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீட்டில் தாம்பூலம் கொடுத்து பிறகு பால் அருந்தி விரதத்தை முடிப்பார்கள். அதே போல தண்ணீர் மட்டும் அருந்தி நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.
அம்பாளுக்கு படைக்கும் நைவேத்தியம் மட்டுமே உண்டு விரதம் இருப்பது
NAVRATRI HISTORY IN TAMIL: ஒரு சிலர் ஒன்பது நாட்களும், அம்மனுக்கு எந்த வகையான நெய்வேத்தியத்தை படைத்து பூஜை செய்கிறார்களோ அதை மட்டுமே உணவாக சாப்பிடுவார்கள்.
உதாரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலவை சாதம், ஒவ்வொரு இனிப்பு வகை மற்றும் சுண்டல் வகை நைவேத்தியம் செய்யப்படும். காலையில் இனிப்பும், சாதம் நைவேத்தியம் செய்யப்பட்ட பிறகு அதையே தங்களுடைய உணவாக சாப்பிடுவார்கள்.
அதேபோல மாலை நேரத்தில் தினமும் ஒரு வகை சுண்டல் செய்து நைவேத்யம் செய்யும் போது, அதையே இரவு உணவாக சாப்பிடுவார்கள். தீவிரமாக விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், உப்பு சேர்க்காமல் விரதம் கடைபிடிப்பார்கள்.
இதில் உங்களுக்கு எந்த மாதிரியான விரதம் மற்றும் உணவுகள் வசதியாக இருக்கிறதோ அதை நீங்கள் பின்பற்றலாம்.
விரதம் இருக்கும் போது என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?
NAVRATRI HISTORY IN TAMIL: பெரும்பாலும் விரதம் இருக்கும் போது, பழங்கள், பால், மோர் மற்றும் பழச்சாறு ஆகியவை சாப்பிடலாம். ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிடுபவர்கள், பால் அல்லது மோர் அருந்தலாம். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். மேலும், திட உணவாக சாப்பிடாமல், கஞ்சி அருந்தலாம்.
- பழ வகைகள்
- அவல், வெல்லம்
- தேங்காய் மற்றும் வாழைப்பழம்
- ஜவ்வரிசி
- பயிறு வகைகள்
- ராகி
பால் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டு 9 நாட்களும் விரதம் இருக்கலாம்.
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
NAVRATRI HISTORY IN TAMIL: பொதுவாக விரதம் இருக்கையில், அதிக மசாலா, பூண்டு, வெங்காயம், முருங்கை உள்ளிட்ட பல உணவுகள் தவிர்க்கப்படும். நவராத்திரி பூஜை செய்பவர்கள் முழுதாக இருக்கும் போது, அரிசி, கோதுமை, ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
மேலும், விரதம் இருப்பவர்கள், வீட்டில் சமைத்த உணவுகள், பழங்கள் தவிர்த்து, ரெடிமேடாக பேக்கெட்டில் கிடைக்கும் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் எண்ணையில் பொறித்த உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, இவ்வகை உணவுகளை சாப்பிட்டால், செரிமான கோளாறு ஏற்படும்.