FESTIVAL OF TAMIL NADU

FESTIVAL OF TAMIL NADU: ஒரு மாநிலத்தின் துடிப்பான மற்றும் விறுவிறுப்பான பண்டிகைகள் மூலம் அந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதை விட சிறப்பு மற்றும் பலனளிக்கும் விஷயம் என்ன?

அழகிய தமிழ்நாடு அதன் குறிப்பிடத்தக்க கோயில்கள் மற்றும் மயக்கும் நிலப்பரப்புகளுடன் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் எண்ணற்ற பல்வேறு திருவிழாக்களால் உங்களை கவர்ந்திழுக்கிறது.

துடிப்பான வண்ணங்கள், அரிய சடங்குகள் மற்றும் மகிழ்ச்சியுடன், நீங்கள் பண்டிகை நேரத்தில் மாநிலத்திற்குச் சென்றால், தமிழகத்தின் முற்றிலும் மாறுபட்ட பக்கத்தைக் காண முடியும்.

தமிழ்நாட்டின் திருவிழாக்கள் பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகள் மற்றும் மாநிலத்தின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் அதன் மக்களின் அசாதாரண உள்ளூர் வாழ்க்கை ஆகியவற்றின் சரியான பார்வையை அளிக்கின்றன. அவற்றில் கலந்துகொள்வது நிச்சயமாக வாழ்நாள் அனுபவமாக இருக்கும்.

Table of Contents

FESTIVAL OF TAMIL NADU – ஐந்திணை விழாக்கள்

  • FESTIVAL OF TAMIL NADU: சங்க காலத்தில் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது.
  • ஒவ்வொரு நிலத்திற்கும் வழிபாடு தெய்வங்களும் திருவிழாக்களும் சிறப்பான முறையில் அமைந்திருந்தன என அறிகிறோம்.

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

(தொல், பொருள். அகம்)

  • எனத் தொல்காப்பியர் பாலை நிலம் தவிர நால்வகை நிலத்துக்குரிய தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
  • ஆனால், பாலை நில மக்கள் கொற்றவை தெய்வமாக வழிபடுகின்றனர்.

1. குறிஞ்சி நில விழா

  • FESTIVAL OF TAMIL NADU: மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம் ஆகும். குறிஞ்சி நிலக் கடவுள் சேயோன், முருகன், வேலன் எனப் பல பெயர்களில் அறியப்படுகிறார்.
  • இந்நிலப்பகுதியில் வேலன் வெறியாட்டு விழா செய்தியினைத் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்கள் வழி அறிகிறோம்.
  • குறிஞ்சி நிலப் பெண்கள் நோயினைத் தீர்ப்பதற்காகப் பராய்க்கடனாக நிகழ்த்தப்பட்டது.
  • வேலன்வெறியாட்டின் பொழுது குறிஞ்சி நிலத்தவர் பல வகை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்துகொண்டு கையில் வேலை ஏந்தி தன்மீது முருகக் கடவுள் ஏறியது போல ஆடுவர்.
  • இவ்விழா நடைபெறும் இடம் வெறியாடுகளம்’ எனப்படும்; அங்குச் சேவல் கொடி நடப்பட்டிருக்கும். பல வகையான நறுமணப்புகைகள் எழுப்பப்படும்.
  • பலவகையான இசைக்கருவிகள் இசைக்கப்படும் என இவ்விழாவைப் பற்றிப் பரிபாடல் கூறுகிறது. இவ்விழாவின் போது, குறிஞ்சி நில மக்கள் தொண்டகப்பறை இசைக்க நடனமாடுவர். இதுவே, குன்றக் குரவைக் கூத்து எனப்பட்டது,

2. முல்லை நில விழா

  • FESTIVAL OF TAMIL NADU: காடும் காடு சார்ந்த நிலப்பகுதியும் முல்லை நிலம் ஆகும். முல்லை நில கடவுள் மாயோன் ஆவார். இந் நில மக்களின் முக்கியத் தொழில் கால்நடை வளர்ப்பு ஆகும்.
  • முல்லை நில மக்கள் பால் சுரக்கும் மரம் வேப்ப மரத்தை தாய்த் தெய்வமாக உருவகித்து வழிபட்டதை அகநானூறு (309) கூறியுள்ளது.
  • இந்நிலப்பகுதியின் உடைமையான கால்நடைகளை எயினர்களிடமிருந்தும் வேடர்களிடமிருந்தும் வழி தவறாமலும் காப்பவர் கருப்பசாமி; இருண்ட கானகத்திற்கு உரியவர், கரிய நிறம் உடையவர் என்ற பொருளில் இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.
  • WELCOME TO TODAY FESTIVAL
  • இவர் மாயோன் எனவும் அழைக்கப்பட்டார். இதையே மாயோன் மேய காடுறை உலகம்’ என்று தொல்காப்பியம் கூறுகின்றது.
  • ஆயர் குல மக்களுக்கும் ஆநிரைகளுக்கும் துன்பம் நேராமல் காக்கும்படி திருமாலைக் (மாயோனை) குரவைக் கூத்தாடி வழிபட்டனர். இவ்வழிபாடே ஆய்ச்சியர் குரவை ஆகும்.

3. மருத நில விழா (இந்திர விழா)

  • FESTIVAL OF TAMIL NADU: மருத நிலத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழா இந்திர விழா, பசி, பிணி, பகை போக்குவதற்காக இந்திரனை மக்கள் வழிபட்டனர்.
  • இவ்விழா சாந்திப் பெருவிழா, தீவகச்சாந்தி என்றும் அழைக்கப்பட்டது. இந்திர விழா சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையிலும் மணிமேகலையில் விழாவறை காதையிலும் நடைபெற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவ்விழா 28 நாள்கள் நடைபெற்றது. சமயக்கணக்கர், காலம் கணிப்போர், சான்றோர்கள், ஜம்பெரும் குழுவினர் எண்பேராயத்தினர் ஆகியோர் ஒன்றுகூடி இந்திரவிழா நடக்கும் நாளை முடிவு செய்வர்.
  • நால்வகைப் படையினரும் சூழ்ந்து வர இந்திரவிழா நடைபெறும் செய்தியினை முரசு அறைந்து மக்களுக்கு அறிவிப்பு மக்கள் வீதிகளிலும் கோயில்களிலும் பூரண கும்பங்களும் பொற்பாலிகைகளும் பாவை விளக்குகளும் வைத்தனர்.
  • வாழை, கரும்பு, கமுகு, வஞ்சிக்கொடி, பூங்கொடி முதலானவற்றைக் கொண்டு நகரை அலங்கரித்தனர்.
  • வீதிகளிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதுமணல் பரப்பினர். பூதசதுக்கம் முதலான தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளைச் செய்தனர்.
  • விழா நாளில் பொது இடங்களில் சான்றோர் நல்லுரை ஆற்றினர். பட்டி மண்டபங்கள் நகரின் பல இடங்களில் ஆங்காங்கே நடைபெற்றது.
  • இவ்வாறு புகார் நகரில் இந்திர விழா நடைபெற்ற செய்தியினைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
  • புகார் நகரில் மட்டுமல்லாமல் மதுரையிலும் இந்திரவிழா நடைபெற்றதாகச் சின்னமனூர் செப்பேடு தெரிவிக்கின்றது.
  • ஐங்குறுநூற்றிலும் (52) இந்திரவிழா பற்றிய செய்திகள் காணக் கிடைக்கின்றன.
  • தொடித்தோட்செம்பியனால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திர விழா விருந்தாட்டுவிழா ஆகிய பெயர்களில் மணிமேகலை குறிப்பிடுகின்றது.
  • மருதநில மக்கள் போருக்குச் செல்லும் போது, தங்கள் அரசனை வாழ்த்தி விழாக் கொண்டாடுவர்.
  • இவ்விழாவில், தங்கள் வாளை உயர்த்திப் பிடித்துத் தண்ணுமை’ என்னும் போர்ப்பறை ஒலிக்க ஆடியும் பாடியும் குரவை நிகழ்த்துவர்.

4. நெய்தல் விழா

  • FESTIVAL OF TAMIL NADU: கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். இந்நிலத்துக்கு உரிய கடவுள் வருணன்.
  • இந்நில மக்களால் கொண்டாடப்படும் விழா, முந்நீர் விழா, நாவாய் விழா என சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிப் பாண்டியன் இவ்விழாவினைக் கொண்டாடிய செய்தியினையும் கரிகாலனின் முன்னோர் நாவாய்த் திருவிழா கொண்டாடிய செய்தியினையும் புறநானூற்று (36) உரையின் மூலம் அறிய முடிகிறது.
  • வருணன் – மேகம், மழை, கடல், ஆறு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டமையால் இவர் நீர்க்கடவுளாக அறியப்பட்டார்.
  • இவரை, உலகம் முழுவதும் பரந்து இருப்பவர், உலகத்தையே ஆள்பவர் என்றும் கூறுவர்.
  • நெய்தல் நில மக்கள் முத்து களையும் வலம்புரிச் சங்கு களையும் காணிக்கையாகச் செலுத்தி, தங்கள் கடல் தெய்வத்தை வழிபட்டனர்.

5. பாலை நில விழா

  • FESTIVAL OF TAMIL NADU: குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் பாலை எனப்பட்டது. கொற்றம் என்றால் வெற்றி. இந்நிலமக்கள், வெற்றியைத் தருபவள் என்ற பொருளில் கொற்றவை’ என்னும் பெண் தெய்வத்தை வழிபட்டனர்.
  • சிலப்பதிகாரத்தில் சாலினி என்ற தெய்வம் ஏறப்பட்ட பெண்ணிற்குக் கொற்றவையின் கோலம் புனையப்பட்டது. இவ்வாறு கொற்றவையை போல அலங்கரிக்கப்பட்ட ஷாலினியை மான்மீது அமரச்செய்து உலாவரச் செய்தனர்.
  • அவ்வாறு உலா பல்வேறு காணிக்கைப் வரும்போது பொருள்களுடன் பெண்கள் பின்தொடர்ந்தனர்.
  • வழிப்பறியில் போது கொட்டும் பறை சூறையாடும்போது ஊதப்படும் கொம்பு, புல்லாங்குழல் போன்றவை அச்சமயத்தில் இசைக்கப்பட்டன.
  • இவ்வாறு பாலை நில மக்கள் தங்கள் நிலக்கடவுளான கொற்றவைக்கு விழா எடுத்தார்.

6. நடுகல் வழிபாடு

  • FESTIVAL OF TAMIL NADU: தமிழர் பண்பாட்டின் உயரிய விழுமியம் வீரத்தை அடிப்படையாகக் கொண்டதே நடுகல் வழிபாடு.
  • இவ்வழிபாட்டு முறையைப் பற்றி அறிய சங்க இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.
  • போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீரமரணம் அடைந்த வீரனது உடலை அடக்கம் செய்யும் முன், அவன் பயன்படுத்திய போர்க்கருவிகளையும் பொருள்களையும் புதை குழியிலிட்டு அடக்கம் செய்தனர்.
  • பிறகு அவ்விடத்தில் ஒரு கல்லை நட்டனர். இது ‘நடுகல்’ எனப்பட்டது. அக்கல்லின் மீது அவ்வீரனது உருவம், பெயர், வீரம், புகழ், தியானம் போன்றவற்றைப் பொறித்தனர்.
  • மேலும், அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து வழிபட்டனர்.
  • தற்போதும் கிராமங்கள்தோறும் மக்கள் வழிபடும் காவல் தெய்வங்களை இந்த நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சியாகக் கருதலாம்.

7. பத்தினி வழிபாடு

  • FESTIVAL OF TAMIL NADU: சிலப்பதிகாரத்தில் நாடுகாண்காதையில் (224 – 225) கண்ண கிக்காகப் பத்தினிக் கோட்டம் அமைக்கப்பட்டது.

மேலோர் விளையும் நூல்நெறிமாக்கள்

பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்

  • என்று குறிப்பிடப்படுவதிலிருந்து பத்தினி வழிபாட்டின் தொன்மையை அறிகிறோம், பத்தினி வழிபாடு என்பது கண்ணகி வழிபாட்டையே குறிப்பிடுகிறது.
  • இவ்வழிபாடு இலங்கையில் வாழும் தமிழர்களால் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • கண்ணகி என்பவள் தமிழக காப்பிய வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற கற்புக்கரசியாகத் திகழ்கிறாள்.
  • சிலப்பதிகாரத்தின் காப்பியத் தலைவி, பொய்யான குற்றச்சாட்டின் மூலம் தனது கணவன் கோவலன் கொலைத்தண்டனைக்கு உட்பட்டதை அறிந்து சினமுற்றார்.
  • பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதிட்டு, தன்கணவன் குற்றமற்றவன் என்பதை நிலைநாட்டினார்.
  • அரசனின் பிழையால் சீற்றம் அடைந்த கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரையே எரித்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
  • கண்ணகி சோழ நாட்டில் பிறந்தாள், பாண்டிய நாட்டில் வீரத்தை நிலை நாட்டினாள், சேரநாட்டில் பத்தினித் தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்படுகிறார்.

8. பாவை நோன்பு

  • FESTIVAL OF TAMIL NADU: மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்பர். இது மார்கழி நோன்பு’ என்றழைக்கப்படும்.
  • பாவை நோன்பு காலத்தில் ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை யையும், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை யையும் பாடி இறைவனை வழிபடுவோர்.
  • சின்ன பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டுமெனவும். மணமான பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டுமெனவும் விரதம் மேற்கொள்வார்கள்.
  • இந்த நோன்பு பழங்காலந்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் மழை பெய்து நாடு செழிக்கவும், மக்கள் வளமுடன் நோய் நொடியின்றி வாழவும், பசு மற்றும் கால்நடைகள் சிறக்கவும் வேண்டி, ஆண்டாளும் மாணிக்கவாசகப் பொருமானும் பாடிய பாடல்களைப் பாடுவார்கள்.
  • பாவை நோன்பு இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, உணவு உண்ணாமல், மலர் சூடும் தம்மை அழகுபடுத்திக் கொள்ளாமல், இறைவனை நினைத்து நோன்பு இருந்து தங்களால் இயன்றளவு தானமும் தருமமும் செய்து அறவழியில் நிற்பர் எனப் பாவை நோன்பு குறித்து திருப்பாவை இரண்டாம் பாடல் கூறுகிறது,

இயற்கை சார்ந்த விழாக்கள்

1. பொங்கல் திருவிழா

  • FESTIVAL OF TAMIL NADU: பொங்கல் விழா, உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • பயிர்கள் செழிக்கவும் விளைச்சல் பெருகவும் கதிரவனே முதன்மைக் காரணமாக விளங்குகிறான்.
  • எனவே, உழவர் பெருமக்கள் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
  • இப்பண்டிகை போகி, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாடப்பட்டு வருகிறது,

2. போகிப் பண்டிகை

  • FESTIVAL OF TAMIL NADU: இப்பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது.
  • பயனற்ற பழைய பொருள்களையும் மனித மனத்தில் உள்ள தேவையற்ற எண்ணங்களையும் போக்குவதே போகிப்பண்டிகையின் நோக்கமாகும்.
  • இப்பண்டிகை நாளன்று வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டின் தலைவாசல் உள்ளிட்ட நிலைக்கதவுகளுக்கு மஞ்சளும் சந்தனமும் பூசுவர்.
  • அன்றைய மாலைப் பொழுதில் வாசற் கூரையில் வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ ஆகியவற்றைக் கொண்டு காப்புக் கட்டினர்.
FESTIVAL OF TAMIL NADU
FESTIVAL OF TAMIL NADU

3. பொங்கல் திருநாள்

  • FESTIVAL OF TAMIL NADU: உழவர் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களை தை மாதம் அறுவடை செய்வர். முதல் விளைச்சலை கதிரவனுக்குக் காணிக்கையாகப் படைப்பதே பொங்கல் திருவிழா ஆகும்.
  • பொங்கல் அன்று பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்துமே புதியனவாக இருக்க வேண்டும் என்பதற்காகப் புதிய கற்களாலான அடுப்பு, புதிய மண்பானை, புதிய அகப்பை, தூயபசுஞ் சாணத்தாலான வறட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள்.
  • வீட்டு வாசலில் பொங்கலிடும் இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலம் இடுவார்கள்.
  • அன்றலர்ந்த மலர்களையே வழிபாட்டிற்குப் பயன்படுத்துவார்கள்.
  • பொங்கல் வைக்கும் பானையை மஞ்சள் குங்குமம், இஞ்சி, மஞ்சள் கொத்து ஆகியவற்றால் அலங்கரிப்பர். புதிதாக அறுவடை செய்த நெல்லை பச்சரிசி பின் வெல்லம் கற்கண்டு, நெய், பால், முந்திரி, திராட்சை முதலியவற்றைக் கொண்டு பொங்கல் இடுவர்.
  • தங்கள் விளைநிலங்களில் விளைந்த செங்கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி, கருணைக்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துக் கதிரவனுக்கு வைத்து வழிபடுவார்கள்.

4. மாட்டுப் பொங்கல்

  • FESTIVAL OF TAMIL NADU: உழவுக்கு உழவனுக்கும் உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும் பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
  • மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை அலங்கரித்து அவற்றுக்குப் பொங்கலைக் கொடுத்து மகிழ்வர்.
  • இதனைத்தொடர்ந்து, மாலையில் மஞ்சுவிரட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு விழா’ நடைபெறும்.
  • அப்பொழுது, இளைஞர்கள் காளைகளை அடக்கித் தனது வீரத்தை வெளிப்படுத்துவர்.

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆயமகள்

  • என்ற சங்க இலக்கியப் பாடல் மூலம் இவ்வீரவிளையாட்டின் தொன்மையை அறியலாம்.
  • பழங்காலத்தில் கால்நடைகளே நமது செல்வத்தின் அடையாளமாகத் திகழ்ந்த ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன.
  • ஏரின் பின்னால் தான் உலகமே சுழல்கிறது’ என்கிறார் வள்ளுவர், அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே.
  • இதன் மூலம் மாடுகளே உழவர்களை உயிர்ப்போடு வைத்துள்ளன என்று கூறினாலும் மிகையாகாது.
FESTIVAL OF TAMIL NADU
FESTIVAL OF TAMIL NADU

5. காணும் பொங்கல்

  • FESTIVAL OF TAMIL NADU: காணும் பொங்கல், பகைமையை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கும் நாளாகும்.
  • அன்றைய தினம் மக்கள் தமது உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள பெரியவர்களை வணங்கி வாழ்த்துபெறும் நாளாகும்.
  • இவ்விழா நாளில் பட்டிமன்றங்கள் நடத்தியும் பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடியும் மகிழ்வார்கள்.
  • இவ்வாறு பண்டைய காலம் முதல் இன்று வரை பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்றும், உழவர் திருநாள் என்றும் சிறப்பான முறையில் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

6. சித்திரைத் திருவிழா

  • FESTIVAL OF TAMIL NADU: சைவமும் வைணவமும் இணைந்து கொண்டாடும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா மதுரை சித்திரைத் திருவிழா.
  • சைவ சமய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் வைணவ சமய விழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் ஒன்றாக நடைபெறுவது.
  • திருமலை நாயக்கர் காலத்தில் இவ்விரு சமய விழாக்களும் ஒன்றாக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டன.
  • சித்திரை மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் இவ்விழா தொடங்கித் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது.

7. ஆடிப் பெருக்கு

  • FESTIVAL OF TAMIL NADU: ஆடி மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ஆடிப்பெருக்கு என்று கூறுவர்.
  • காவிரி பாயும் பகுதிகளில் வாழும் மக்கள் காவிரியாற்றை அன்னையாகவும் தெய்வமாகவும் நினைத்து வழிபடுவர்.
  • அதற்காக வற்றாத நதிகளைத் தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, வழிபட்டு உழவு வேலையை தொடங்குவார்கள்.
  • இதன் அடிப்படையிலேயே ஆடிப் பட்டம் தேடி விதை’ என்ற பழமொழி உருவானது, இப்பகுதிகளில், ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று “ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

8. மகா மகத்திருவிழா

  • மாசி மாதத்தில் குரு, சிம்ம ராசியில் இருக்கும் போது, மக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசிமகம் ஆகும்.
  • நவக்கிரகங்களில் குரு ஓர் இராசியில் இருந்து மற்றோர் இராசிக்கு இடம்பெயர ஒரு வருடம் ஆகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் குரு பெயர்ச்சி விழாவும், மாசிமக விழாவும் நடைபெறுகிறது.
  • இதுபோலவே, பன்னிரண்டு இராசிகளையும் குரு கடந்து வர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். ஆகவேதான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசிமகம், மகாமகம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • அன்றைய தினம் புனித இடங்களில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். எனவே, கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி அன்று பக்தர்கள் புனித நீராடுகிறார்கள். மேலும், வடநாட்டில் நடைபெறும் கும்பமேளாவைப் போன்ற இதனை, தென்னகத்தின் கும்பமேளா என்றும் அழைப்பர்.

சைவத் திருவிழாக்கள்

  • FESTIVAL OF TAMIL NADU: முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள் சைவர்களாவர். சிவனை வழிபடும் திருவிழாக்கள் சைவத் திருவிழாக்கள் ஆகும்,

1. மகாசிவராத்திரி

  • FESTIVAL OF TAMIL NADU: மகா சிவராத்திரி விழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவர்.
  • அன்று நடைபெறும் நான்கு கால பூஜைகளில் சிவபுராணங்களைப் பாட வேண்டும்.
  • மேலும், ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் சிவராத்திரிகளில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ‘மகா சிவராத்திரியாகும்.
FESTIVAL OF TAMIL NADU
FESTIVAL OF TAMIL NADU

2. விநாயகர் சதுர்த்தி

  • FESTIVAL OF TAMIL NADU: ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஆலயங்களிலும் ஆலயம் இல்லா இடங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.
  • ஆலயமில்லாத இடங்களிலும் தற்காலிகமாகக் களிமண்ணால் விநாயகர் உருவம் செய்து வழிபடுவர். இவ்விழாவை வடஇந்தியாவில் கணேஷ் சதுர்த்தி கொண்டாடுகின்றனர். பெயரில் என்ற

3. தீபத்திருவிழா

  • FESTIVAL OF TAMIL NADU: கார்த்திகை மாதம் முழு நிலவு நாளில் வீடுகளிலும் கோயில்களிலும் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இதுவே, கார்த்திகைத் திருவிழாவாகும்.
  • இவ்விழா தொன்றுதொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றி இறைவனை ஒளி வடிவில் வழிபடுவர்.
  • மேலும், மற்ற சிவத்தலங்களிலும் முருகன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
  • நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கைப் பொருள்களைப் பெரும் ஆற்றலாகக் கருதி மக்கள் வழிபட்டு வந்ததன் தொடர்ச்சியாகவே இவ்விழா கொண்டாடப்படுகிறது.

4. ஆதிரை திருவிழா

  • FESTIVAL OF TAMIL NADU: திருவாதிரை என்பது, ஆண்டுதோறும் மார்கழி மாத முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் விழாவாகும்.
  • இவ்விழாவினை பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்திலும், சம்பந்தர், நாவுக்கரசர் தேவாரத்திலும் பாடியுள்ளனர்.
  • சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு உத்திரகோசமங்கை, திருக்கழுக்குன்றம், திருமுல்லைவாயில் போன்ற புகழ்பெற்ற சிவத்தலங்களில் திருவாதிரை விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு களி யைப் படைத்துப் பக்தர்களுக்கும் வழங்குவர்.
  • இதனால், ‘திருவாதிரைக் களி’ என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. மேலும், சிதம்பரம் கோயிலில் இறைவனை ஆடல் கோலத்தில் கண்டு வழிபடுவர்.
சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகள்
  • பொற்சபை – நடராஜர் கோயில் – சிதம்பரம்
  • வெள்ளிசபை – மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் – மதுரை
  • இரத்தினசபை – வடாரண்யேசுவரர் கோயில் – திருவாலங்காடு
  • தாமிரசபை – நெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி
  • சித்திரசபை – குற்றாலநாதர் கோயில் – குற்றாலம்

வைணவத் திருவிழாக்கள்

  • FESTIVAL OF TAMIL NADU: திருமாலை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள் வைணவர்களாவர். திருமாலை வழிபடும் திருவிழாக்கள் வைணவத் திருவிழாக்கள் ஆகும்.

1. வைகுண்ட ஏகாதசி

  • FESTIVAL OF TAMIL NADU: மார்கழி மாதம் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.
  • இது வைணவர்கள் மற்றும் திருமாலை வழிபடுபவர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
  • திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது.

2. திருவோணம்

  • திருமாலின் பிறந்த நாள் ஆவணி மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் விழா திருவோணம் ஆகும்.
  • இது, திருமாலுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால் அந்நாளில் மக்கள் பல கோயில்களுக்கும் சென்று திருமாலை வழிபடுவர்.
  • இந்நாளில், மகாபலி மன்னர் வருவதாகக் கருதி மக்கள் வீதிகளிலும் வீட்டின் முற்றத்தில் பல வண்ணப்பூக்களால் பெரிய கோலங்கள் போட்டு அவரை வரவேற்பர்.
  • இதை “அத்தப்பூ” என்றழைப்பர். இவ்விழாவைப் பற்றிய செய்திகள் மதுரைக்காஞ்சியிலும் தேவாரத்திலும் நாலாயிரத் திவ்வியபிரபந்தத்திலும் இடம் பெற்றுள்ளன.
FESTIVAL OF TAMIL NADU
FESTIVAL OF TAMIL NADU

3. தீபாவளி

  • FESTIVAL OF TAMIL NADU: ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை நாளில் அமாவாசைக்கு முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளியாகும். தீபாவளி என்றால் ‘தீபங்களின் வரிசை என்பது பொருள்.
  • இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளி திருநாளாம்.
  • முன்பொரு காலத்தில் நரகாசுரன் தேவர்களையும் மக்களையும் கொடுமை செய்ததாகவும், அவனது கொடுமையை மக்களும் தேவர்களும் பொறுக்க முடியாமல் திருமாலிடம் முறையிட்டதாகவும், திருமால் சக்கராயுதத்தால் நரகாசுரனை வதம் செய்து மக்களையும் தேவர்களையும் காத்ததாகவும் கூறுவர்.
  • நரகாசுரன் தான் இறக்கும் தறுவாயில் தனது நினைவு நாளை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதாகவும் கூறுவர்.
  • அந்நாளே, தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா, தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • இத்திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, வீடு முழுவதும் விளக்கேற்றிப் பூஜை செய்து, பட்டாசுகள் வெடித்துப் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுகின்றனர்.
  • வட இந்தியாவில் இத்திருநாளைத் தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரி விழா

  • FESTIVAL OF TAMIL NADU: வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றைத் தரும் முப்பெரும் கடவுளாக முறையே மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகியோரைப் போற்றி வணங்கும் விழாவே நவராத்திரி திருவிழாவாகும்.
  • நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவுகள் என்பது பொருளாகும். இவ்விழா புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பின்வரும் ஒன்பது நாட்களும் கொண்டாடப்படுகிறது.
  • ஒன்பதாவது நாள் நடக்கும் வழிபாடு கலைமகளுக்கு உரியதாகக் கருதி புத்தகங்கள், இசைக்கருவிகள் மற்றும் பல தொழில் சார்ந்த கருவிகளையும் வைத்து வழிபடுவர்.
  • செய்யும் தொழிலே தெய்வம் என்ற கருத்தில் மக்கள் தமது தொழிலைப் போற்றிக் கொண்டாடுவதே இவ்விழாவின் நோக்கமாகும்.
  • பத்தாம் நாள் விழாவாக “விஜயதசமி” கொண்டாடப்படுகிறது. விஜயதசமி என்றால் வெற்றியைத் தருகின்ற நாள் என்பது பொருள்.
  • அன்று குழந்தைகளுக்கு கல்வியைத் தொடங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.
  • வடநாட்டிலும், தென்னாட்டிலும் உள்ள எல்லா ஆலயங்களிலும் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அம்மன் திருவிழா

  • FESTIVAL OF TAMIL NADU: அம்மன் வழிபாடானது, ஊர்தோறும் நடைபெறும் முக்கிய வழிபாடாகும். மாரி என்றால் மழை என்று பொருள். கோடைக்காலத்தில் வெப்பத்தின் காரணமாக மக்களுக்கு அம்மை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
  • இந்த நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக மழை தர வேண்டி மாரியம்மனுக்கு விழா எடுத்து வழிபடுகின்றனர்.
  • பல நோய்களுக்கு மருந்தாக உள்ள வேப்பமரம் மாரியம்மனுக்கான ‘தல விருட்சமாகும். இவ்விழா, காப்புக்கட்டுதல் தொடங்கி ஏழு நாள் முதல் பதினைந்து நாள் வரை நடைபெறும்.
  • பூவோடு எடுத்தல், பூவாரி கொட்டுதல், அலகு குத்துதல், சாட்டை அடித்தல், மொட்டை அடித்தல், மாவிளக்கு எடுத்தல், தீ மிதித்தல் போன்றவை மாரியம்மன் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி கோயில் தீமிதி திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். இவ்விழா, மஞ்சள் நீராட்டுதலுடன் நிறைவடையும்.
  • இவ்விழா, கிராமங்கள்தோறும் மக்கள் உள்ள அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பூரம்

  • FESTIVAL OF TAMIL NADU: அம்மனுக்கு உகந்த திருநாள்களில் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பூரத்திருநாள் மிகவும் சிறப்புடையது.
  • சிவத் தலங்களில் அம்மனுக்கும், திருவில்லிப்புத்தூரில் ஆண்டாளுக்கும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
  • இந்நாளில், அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து ஆடிக்கூழ் படைத்து இவ்விழாவை மக்கள் கொண்டாடுகின்றனர்.

நாட்டார் திருவிழாக்கள்

  • FESTIVAL OF TAMIL NADU: நாட்டார் தெய்வங்கள் கிராம மக்களால் வணங்கப்படுபவை ஆகும். இவை சிறுதெய்வங்கள் கிராம தேவதைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • நாட்டார் தெய்வ வழிபாடுகள் கிராம மக்களின் பண்பாட்டுடனும் பழக்க வழக்கங்களுடனும் ஒன்றிணைந்த வையாக உள்ளன.
  • பொன்னியம்மன் போத்திராஜா, அண்ணமார், அய்யனார், காத்தவராயன், நாடியம்மன், கருப்பசாமி, சுடலை மாடன், இசக்கி அம்மன் போன்ற பல்வேறு நாட்டார் தெய்வங்களை மக்கள் தங்கள் முன்னோர்களாகவே கருதுவர்.
  • இவ்விழாக்கள் மூலம் இன்றும் நாட்டுப்புறக் கலைகள் உயிர்த்திருக்க இவ்விழாக்கள் பேருதவி புரிகின்ற ன.

கந்த விரத விழாக்கள்

  • FESTIVAL OF TAMIL NADU: தமிழ்க் கடவுள் முருகனை வணங்கும் விழாவே கந்த விரத விழா ஆகும். ஐப்பசி மாதம் வளர்பிறை ஆறாம்நாள் சஷ்டியே கந்த சஷ்டி” விழாவாகும்.
  • முருகப் பெருமான் அரக்கனை ஒடுக்கப் போர் புரிந்த நிகழ்வையே கந்த சஷ்டி என்கிறோம். வைகாசி மாதம் முழு நிலவு நாளில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களில் இவ்விழா நடைபெறுகிறது.
  • பங்குனி உத்திரம் என்பது, பங்குனி மாதத்தில் முழு நிலவு விழாவாகும். நாளில் கொண்டாடப்படும் முருகன் இது திருமணநாளாகக் கருதப்படுகிறது.
  • ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்குரிய நாளாகக் கருதி வழிபடுவர், இந்நாளன்று, அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
FESTIVAL OF TAMIL NADU
FESTIVAL OF TAMIL NADU

முருகனுக்குரிய அறுபடை வீடுகள்

  • திருப்பரங்குன்றம்
  • திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்
  • திருவாவினன்குடி (எ) பழனி
  • திருவேரகம் (எ) சுவாமிமலை
  • திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
  • பழமுதிர்சோலை
  • கோயில் சார்ந்த விழாக்கள்

தேர்த் திருவிழாக்கள்

  • FESTIVAL OF TAMIL NADU: தமிழகத்தில் உள்ள கோயில்கள் தோறும் நடைபெறுகின்றன. திருவிழாக்கள் திருவிழாக்களில் தெய்வங்களைத் தேரில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வருவது முக்கிய நிகழ்வாகும்.
  • ஒவ்வொரு கோயில் திருவிழாவில் தேர்த்திருவிழா குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். நடைபெறும் பத்துநாள்கள் திருவிழாவின் இறுதி நாளில் மஞ்சள் நீராட்டிற்கு முதல் நாள் தேரோட்டம் நடைபெறும்.
  • முதன்மைத் தெய்வத்திற்குப் பெரிய தேர் பிற தெய்வங்களுக்குச் சிறிய தேரும் இருக்கும், தேரில் பெரிய கயிறுகள் இணைக்கப்படும். அவற்றை படம்’ என்று கூறுவர்.
  • இவ்வடத்தைப் பற்றி இழுத்துச் செல்வதை வடம் பிடித்தல் என்பர்.
  • கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உதவும் வகையிலும் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்யவும் இறைவனை வீதி உலாவாக அழைத்து ஒருவர்.
  • இவ்வாறு இறைவன் தன்னை நாடி வந்த அடியவர்களுக்கு அருள் புரிவதோடு, தான் அவர்களை நாடிச் சென்றும் அருள்புரிவார் என்பதைத் தேர்த்திருவிழா உணர்த்துகிறது.
  • திருவாரூரில் தியாகராசப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலின் தேர் ஆசியாவிலேயே மிக உயரமான தேர் என்ற பெருமைக்கு உரியது.
  • இத்தேர் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்டது. நான்கு நிலைகளைக் கொண்டதாக உள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் இக்கோயிலின் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுவது வேளாங்கண்ணி ஆகும். வேளாங்கண்ணி தேர்த்திருவிழா அனைத்து சமய மக்களும் கலந்து கொள்ளும் ஒரு விழாவாகும்.
  • இராமாயணம் மகாபாரதம் போன்ற புராணக்கதைகளையும் சமுதாயத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் சிற்பங்களாகச் செதுக்கித் தேர் அழகுபடுத்துவர்.
  • எனவே, தேர் என்பது திகழ்கிறது. தமிழகத்தில் திருவாரூர், பழனி, அவினாசி, திருவில்லிப்புத்தூர், சிதம்பரம், கும்பகோணம், மதுரை, திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, திருநெல்வேலி போன்ற நடைபெறும் இடங்களில் தேர்த் திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

கிறிஸ்தவ திருவிழாக்கள்

1. கிறிஸ்துமஸ்

  • FESTIVAL OF TAMIL NADU: மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட, இறைத்தூதராக இயேசு பெருமானைக் கருதி வழிபடுவர்.
  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேல் நாட்டில் பெத்தலகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் ஏசு பெருமான் பிறந்தார். ஏசுபெருமான் பிறந்த நாளான டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் உலக அளவில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது.
  • இத்திருநாளில் மக்கள் தேவாலயங்களுக்குச் சென்று வழிபடுவர். கிறிஸ்தவர்கள் வீடுகள்தோறும், நட்சத்திரம் விளக்குகளை அமைத்தும் புத்தாடை அணிந்தும் இனிப்புகள் வழங்கிடும் கொண்டாடி மகிழ்வர்.
FESTIVAL OF TAMIL NADU
FESTIVAL OF TAMIL NADU

2. புனித வெள்ளி

  • FESTIVAL OF TAMIL NADU: புனித வெள்ளி (Good Friday), பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் கிறிஸ்தவர்கள் இதனை அழைப்பர்.
  • இயேசு பெருமானைச் சிலுவையைச் சுமக்கச் செய்து, சவுக்கால் அடித்துக் கடைசியாக சிலுவையில் அவரை அறைந்து கொடுமைப்படுத்தினார்கள்.
  • மன்னனின் ஆணைக்குப் பயந்த யூதேயா நாட்டு மக்கள், எதையுமே சொல்லமுடியாமல் வேதனையுடன் கண்ணீர் விட்டார். இயேசு பெருமான் அடைந்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தமையையும் நினைவுகூரும் நிகழ்வே புனித வெள்ளி’ ஆகும்.
  • ஏசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட இந்நாளை கிறிஸ்தவர்கள், நினைவு நாளாகக் கருதி வழிபடுகின்றனர்.

3. புனித ஞாயிறு

  • ஏசு பெருமான் இறப்பதற்கு முன்னார் நான் மீண்டும் உயிர் பெற்று வருவேன் எனத் தமது சீடர்களுக்குச் சொல்லிச் சென்றார்.
  • சிலுவையில் கொடியவர்களால் உயிருடன் அறையப்பட்ட ஏசு பிரான் மூன்றாம் நாள் உயிர்பெற்று மக்களுக்கு ஆசியும் சீடர்களுக்கு அறிவுரையும் வழங்கி மீண்டும் மறைந்தார்.
  • அவர் உயிர்த்தெழுந்த மூன்றாவது நாள் புனித ஞாயிறு’ என்பர்.

இசுலாமியத் திருவிழாக்கள்

1. மொகரம் பண்டிகை

  • FESTIVAL OF TAMIL NADU: மொகரம் என்ற மாதம் இஸ்லாமிய நாட்காட்டியின் (அரபு) மாதங்களில் முதல் மாதமாகும். இது இவர்களின் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
  • இசுலாமிய நாட்காட்டி சந்திர நாட்காட்டியாகும் இம்மாதத்தில் சண்டைகள், புனித போர்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனத் திருக்குரான் கூறுகிறது. இப்பண்டிகை தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

2. ரமலான் (ரம்ஜான்) பண்டிகை

  • FESTIVAL OF TAMIL NADU: ரமலான் பண்டிகையை ஈகைத் திருநாள், ஈத் பெருநாள் என்றும் அழைப்பர், ஈத்’ என்னும் அரபுச் சொல்லிற்குத் ‘தடுத்து விடுவது என்பது பொருள்.
  • இந்நோன்பு தங்களைத் தீமைகளில் இருந்து தடுத்துக் காப்பதாகக் இசுலாமியர்கள் கருதுகிறார்கள்.
  • வைகறைப் பொழுதின் தொடக்கத்திலிருந்து பொழுது மறையும் வரை அல்லாவை நினைத்தபடி இசுலாமியர்கள் நோன்பு மேற்கொள்ளுவர்.
  • இந்நோன்பில் முதல் பத்து நாட்கள் இறையருள் கிடைப்பதற்காகவும், இரண்டாவது பத்து நாட்கள் இறைவனிடத்தில் மன்னிப்பு பெறுவதற்காகவும், மூன்றாவது பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.
  • இந்த நோன்பின் இறுதி நாள் ரமலான் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
FESTIVAL OF TAMIL NADU
FESTIVAL OF TAMIL NADU

3. பக்ரீத் பண்டிகை

  • FESTIVAL OF TAMIL NADU: இப்பண்டிகை இசுலாமியர்களின் பன்னிரண்டாவது மாதம் “துல்ஹஜ்” என்ற மாதத்தில் வருகின்றது.
  • இசுலாமியர் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது மெக்காவிற்கு “ஹஜ்” பயணம் மேற்கொள்ள வேண்டும்.
  • இப்பயணத்தினால், தாம் தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பாலகர் போன்று புனிதமாகவும் தீமை நீங்கியவராகத் திரும்பிவிடுவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
  • ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் ஹாஜிக்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஹாஜிக்கள் அல்லாவின் வீட்டிற்கு விருந்தாளியாகச் செல்கிறார்கள்.
  • இப்பயணம் மேற்கொள்ள இயலாதவர்கள் குர்பானி கொடுத்துப் பக்ரீத் தொழுகை செய்வார்கள்.

சமணத் திருவிழா

1. மகாவீர் ஜெயந்தி

  • FESTIVAL OF TAMIL NADU: மகாவீரர், பொ.ஆ.மு. 546 இல் வைசாலி நாட்டில் குண்டா கிராமம்’ என்னும் இடத்தில் பிறந்தார்.
  • அரசகுமாரனாகிய இவர் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறித் தியானம் செய்து, உயர்நிலையை அடைந்தார்.
  • இவர், தாம் கண்டறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்து நல்வழிப்படுத்தினார்.
  • இவர் அன்பு, அமைதி, அகிம்சை போன்ற நற்குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
  • இவரது பிறந்த நாள் மகாவீர் ஜெயந்தி யாக கொண்டாடப்படுகிறது.
  • சமண சமயத்தில் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர்.
  • சமண மதத்தில் திகம்பரர், சுவேதம்பரர் என்ற இரு பிரிவுகள் உண்டு
  • திகம்பரர் – திசைகளையே ஆடையாக அணிபவர்
  • சுவேதம்பரர் வெண்ணிற ஆடை அணிபவர்

பௌத்த திருவிழா

1. புத்தபூர்ணிமா

  • புத்தபூர்ணிமா வைகாசி மாதம் முழு நிலவு நாளில் உலகில் உள்ள அனைத்து கொண்டாடப்படுகிறது,
  • பௌத்தர்களும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் முழு நிலவு நன்னாளில் நேபாள நாட்டில் கபிலவஸ்துவில் உள்ள லும்பினி ‘ என்னும் கிராமத்தில் அரச குடும்பத்தில் புத்தர் பிறந்தார்.
  • மக்கள் நலன் கருதிப் பெற்றோரையும் மனைவியையும் மகனையும் அரசாட்சியையும் துறந்தார்.
  • புத்தபூர்ணிமா புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளான பெருந்துறவு, நிர்வாண நிலை அடைந்தது, முதல் போதனையை நிகழ்த்தியது.
  • பரிநிருவாண நிலையை அடைந்தது என அனைத்தும் நிகழ்ந்த இந்நாளையே புத்த பூர்ணிமா என்று பௌத்த சமயத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
  • பௌத்தர்கள் புத்தபூர்ணிமா அன்று வெண்ணிற ஆடை அணிந்து பௌத்த விகாரங்களுக்குச் சென்று மலர்களைத்தூவி வழிபாடு செய்கின்றனர்.
  • இவ்விழா பீகாரில் உள்ள புத்த கயாவில் உத்திபிரதேசத்தில் உள்ள சாரநாத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியா மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட உலக நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • புத்த பெருமானின் இப்புனித நன்னாள் குறித்த செய்தி மணிமேகலை என்ற காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது,
  • அக்காப்பியத்தில் தீவதிலகை என்பாள் என்னுடைய வரலாற்றைக் கூறியதோடு ஆபுத்திரனையும் அமுதசுரபியைப் பற்றியும் எடுத்துரைத்துப் “பசிப்பிணி போக்கும் அமுதசுரபியானது பௌத்தர்களின் புனித நன்னாளில் புத்தபூர்ணிமா அன்று மணிமேகலையிடம் வந்துசேரும் என்றும் கூறுகிறாள்.

குருநானக் ஜெயந்தி

  • குருநானக் பிறந்த நாள் சீக்கியர்களால் குருநானக் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது, குருநானக், லாகூருக்கு அருகேயுள்ள தால்வண்டி என்ற கிராமத்தில் பிறந்தார்.
  • முதலே இளம்வயது இறையனுபவங்களில் திளைத்திருந்தேன் தமது முப்பதாவது வயதில் ஞானம் பெற்றார்.
  • தொடக்கத்தில் பல்வேறு அருள்செயல்களை நிகழ்த்தி மக்களை நல்வழி படுத்தினார் ஆன்மீகக் கருத்துகளை மக்களிடையே பரப்பினார்.
  • மத ஒற்றுமைக்கு மகத்தான சேவை செய்தார். இவர் அன்பு நெறியை வலியுறுத்தினார். இவரது அருளுரைகள் அடங்கிய புனித நூல் ஆதிகிரந்தம் ஆகும்.
  • குருநானக் ஜெயந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே குருத்வாராக்களில் தொடர்ந்து நாற்பத்தெட்டு மணி நேரம் புனித நூலான ஆதிகிரந்தம் வாசிக்கப்படும்.
  • குருநானக் பிறந்தநாள் அன்று அதிகாலை நான்கு மணி முதலே பக்திப்பாடல்கள் புனித உரைகளும் வாசிக்கப்பட்டு விழா தொடங்கும்.
  • அன்றைய நாள் முழுவதும் குருத்வாராக்களில் மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்படும்.
  • இந்நாளில் உலகெங்கும் உள்ள சீக்கிய குருத்வாரா கள் வண்ண வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்படும்.
  • அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் புனிதத்தலம் ஆகும் பஞ்சாப் ஹரியானா போன்ற மாநிலங்களில் இந்த நாளில் சிறப்பு அணிவகுப்புகளும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். இறை வழிபாட்டில் கலந்துகொள்ளும் அனைத்துச் சீக்கியர்களும் தமது வழக்கப்படி தலைப்பாகை, வாள், புத்தாடை அணிவார்கள்.
  • பின்னர், ஊர்வலம் நடைபெறும், நீண்ட பட்டை தீட்டப்பட்ட வாள்களை வைத்துக் கொண்டு, அதைச்சுழற்றிப் பல்வேறு வீரதீரச் செயல்களைச் செய்துகொண்டு ஊர்வலமாகச் செல்வார்கள். உலகெங்கிலுமுள்ள நாடகக்கலைஞர்கள் அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை.

Leave a Comment