VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமான பண்டிகைகளில் ஒன்றுதான் விநாயகர் சதுர்த்தி. முழு முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

JALLIKATTU HISTORY IN TAMIL | ஜல்லிக்கட்டு வரலாறு

அறிவு, ஞானம், கல்வி ஆகியவற்றுக்கான கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் செய்தாலும் விநாயகரை வணங்கித்தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடருகிறது.

இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் எவ்வாறு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் ஊர்வலமும் மூன்று நாட்களுக்கு பிரசித்தி பெற்ற நடைபெறுமோ, அதே போல வடமாநிலங்களில் 3 – 10 நாட்கள் வரை விசேஷமாக விநாயகர் சதுர்த்தி நடைபெறும். கணேஷ் உத்சவ் அல்லது கணேஷ் சதுர்த்தி என்று கூறுவார்கள்.

விநாயக சதுர்த்தி 2024

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: 2024ஆம் ஆண்டுக்கான விநாயக சதுர்த்தி செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு
VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL – கொண்டாட்டம் தொடங்கியதன் வரலாறு

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் கணேஷ் சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படும். அவரவர் வீட்டில் இதற்கான விசேஷமாக பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்த பண்டங்களை சமைத்து நைவேத்தியமாக வைத்து கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்கும்.

மற்றொரு பக்கம் அவரவர் வசிக்கும் தெரு அல்லது சமூகங்கள் எந்த சின்ன சின்ன குழுவாக சேர்ந்தும் கொண்டாடுவார்கள். இதை தவிர்த்து சிறியது முதல் விண்ணை முட்டும் அளவுக்கு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

ஆனால், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதன்முதலாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் தொடங்கியது என்று கூறப்படுகிறது.

மராட்டிய மன்னரான சிவாஜி மகாராஜாவால் இந்த பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் இதைக் கொண்டாட வேண்டும் என்றும் இந்துக்களுடைய பாரம்பரியத்தை வளர்த்து, மக்களிடையே ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்து கொண்டாட வேண்டும் என்று மன்னர் ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிராவில் மட்டுமே விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி, காலம் செல்ல செல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது உலகம் முழுவதிலும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா உட்பட நேபாள், மொரிஷியஸ், தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வாழும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு
VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு

விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம்

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: சிவபெருமான் மற்றும் பார்வதியின் மூத்த மகனாக அவதரித்தவர் தான் விநாயகர். இவருடைய பிறந்தநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

எந்த கடவுளுக்குமே இல்லாத அளவுக்கு ஒரு விலங்கின் தலையை தன்னுடைய தலையாக வைத்திருக்கும் ஒரே இறைவன் விநாயகர் மட்டும் தான்.

விநாயகர் அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், செல்வ வளம் மற்றும் செழுமை ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார். விநாயகரை வணங்கி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளை நீக்கி நல்ல வளமான எதிர்காலத்தை அருள்வார் என்பதும் ஐதீகம்.

வீடுகளை விதவிதமாக அலங்கரிப்பதில் இருந்து பல விதமான உணவுகளையும் பிரசாதங்களையும் சமைத்து, விநாயகரை ஊர்வலமாக கொண்டு வந்து, பூஜை செய்து மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தான் விநாயகர் சதுர்த்தி.

எனவே இது மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் என்பதன் அடையாளமாகவும் திகழ்கிறது.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு
VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு

விநாயகர் பிறந்த கதை

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: இந்துக்களின் புராணங்களில் படி விநாயகர் அவதரித்த கதை மிகவும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஏற்கனவே பலரும் இந்தக் கதையை பற்றி திரைப்படங்களாக பார்த்திருப்பீர்கள் அல்லது கதையாகவும் கேட்டிருப்பீர்கள்.

சிவபெருமான் இல்லாத பொழுது தன்னைப் பாதுகாப்பதற்கு ஒரு நம்பிக்கையான தைரியமான பாதுகாவலர் வேண்டும் என்ற காரணத்தினால், பார்வதி தேவி தன் உடலில் பூசி இருந்த மஞ்சள் மற்றும் சந்தனத்தில் இருந்து விநாயகருக்கு உயிர் கொடுத்தார்.

பார்வதி தேவி குளித்து கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்துக்கு காவலாக விநாயகர் இருந்தார். அப்பொழுது சிவபெருமான் உள்ளே நுழைய முயற்சிக்கும் பொழுது சிவபெருமானையே விநாயகர் தடுத்துவிட்டார். அதில் கோபம் கொண்ட சிவபெருமான் விநாயகரின் தலையை துண்டித்தார். நடந்ததை கேள்விப்பட்ட பார்வதி, அதீத கோபம் கொண்ட மகா காளியாக உருமாறினார்.

காளியின் கோபம் பிரபஞ்சத்தையே அழித்து விடும் என்பதால், தன்னுடைய தவறை உணர்ந்த சிவபெருமான், துண்டித்த தலையை ஒன்று சேர்க்க முடியாது என்று ஒரு விலங்கின் தலையை கொண்டு வந்தால் மீண்டும் விநாயகருக்கு உயிர்ப்பிக்க முடியும் என்று ஒரு யானையின் தலையை கொண்டு வந்து விநாயகருக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

இது, பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறவி எடுப்பது என்ற சுழற்சியைக் குறிக்கிறது.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு
VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு

விநாயகர் சதுர்த்தி விழாவில் செய்யப்படும் 4 முக்கிய சடங்குகள்

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: பிராணப் பிரதிஷ்டை: விநாயகரின் சிலைக்கு உயிர் கொடுப்பது. சிலையை வாங்கி வந்து, அலங்கரித்து, மந்திரங்கள் ஜபித்து, பூஜை செய்வதைக் குறிக்கும்.

16 வகை நைவேத்தியங்களுடன் வழிபாடு: விநாயகர் சதுர்த்தி அன்று, 16 வகையான பொருட்களை நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். இதில், பூக்கள், ஊதுபத்தி, நீர், விளக்குகள் ஆகியவையும் அடங்கும்.

உத்தர பூஜை: 10 நாட்கள் கொண்டாடப்படும் இடங்களில், இறுதி நாளன்று பண்டிகை நிறைவேறுவதையொட்டி, உத்தர பூஜை செய்து, விநாயகரின் ஆசியைக் கோருவார்கள்.

கணபதி விஸார்ஜன்: 10 ஆம் நாளன்று, கணபதி சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஆறு அல்லது கடலில் கரைத்து வருவதைக் குறிக்கும்.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு
VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்முறை

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் விநாயகரை எந்த இடத்தில் வைக்கப் போகிறீர்களோ, அந்த இடத்தை சுத்தம் செய்து அலங்கரித்து வைக்க வேண்டும். விநாயகரை மனையில் வைத்து பூஜை செய்வதற்கு முன் விநாயகரை, அதில் கோலம் போட வேண்டும்.

  • இரண்டு நபராக விநாயகர் சிலையைக் கொண்டு வர வேண்டும்.
  • வீட்டுக்குள் கொண்டு வரும் முன்பு ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • விநாயகர் சிலை மீது நீர் தெளித்து, பூஜை செயம் மனையில் வைக்க வேண்டும்.
  • பின்னர், மாலை, வஸ்திரம், பூக்கள், மஞ்சள், குங்குமம் என்று அலங்கரிக்கலாம்.
  • விளக்கு மற்றும் ஊதுபத்தி ஏற்றி பூஜையைத் தொடங்கலாம்.
  • விநாயகர் சிலையை பூக்கள் விளக்குகள் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கலாம். பூஜைக்கு பழங்கள், இனிப்புகள், வழக்கமான பூஜை செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், ஊதுபத்தி, கற்பூரம்,
  • வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிரசாதமாக, தயிர், பால், வெண்ணெய், சோளம், கம்பு, தேன், நெய் போன்ற உணவுகளை வைக்கலாம். பழங்களில் வாழை, ஆப்பிள், மாதுளை, ஆகியவற்றை வைக்கலாம்.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: இதைத் தவிர, முக்கடலை சுண்டல், கொழுக்கட்டை, பாயசம், போளி, லட்டு, புளி சாதம், எலுமிச்சை சாதம், உள்ளிட்டவற்றை குளித்த பின்பு சமைத்து நைவேத்தியம் தயார் செய்யலாம்.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு
VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL | விநாயக சதுர்த்தி வரலாறு

சதுர்த்தி விரதம்

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும்.

“பிள்ளையார்சுழி” போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை ஆதி மூல கணபதி என்று வர்ணிக்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்கின்றோம்.

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும், 3 விதமான கணங்களாகப் பிரித்து திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது கணப்பொருத்தம் பார்ப்பார்கள். மூன்று வகையான அந்த கணப் பிரிவு தேவ கணம், மனித கணம், ராட்சச கணம் என்பதாகும்.

கணப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவர் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி.. அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் ஆனைமுகப்பெருமான்.

விநாயகருக்கு உகந்த நாட்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். ஞாலம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும்.

அதற்கு உகந்த மாதமாக ஆவணி மாதம் விளங்குகிறது. மற்ற மாதங்களிலும் கூட சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை மட்டும்தான் “விநாயகர் சதுர்த்தி” என்று அழைக்கிறோம்.

அன்றைய தினம் ஆலயத்திற்குச் சென்று, அருகம்புல் மாலையிட்டு கணபதியை வழிபட்டால், அவர் பெருகும் பொன்னை அள்ளி பெருமையுடன் நமக்களிப்பார்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எப்போது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.

தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்குப் பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.

விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’ என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன் முழுப்பொருளாகும்.

கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், அவனுக்கு முன் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டனர். அந்தப் பழக்கமே இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகிய வற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது, “இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான். சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும்.

மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.

கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தியாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் வீற்றிருக்கின்றார். அவரை சதுர்த்தியன்று பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால், நம் தேவைகள் நிறைவேறும்.

தவிர அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்றும் ஆனைமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். இதனால் அகிலம் போற்றும் வாழ்க்கையும், சந்தோஷம் நிறைந்த வாழ்வும் அமையும்.

ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில் வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றன.

விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ என்று பெயர் பெற்றவர் விநாயகர். முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்க விநாயகர் யானை வடிவில் வந்து உதவி செய்ததாக புராணங்கள் சொல்கின்றன.

VINAYAKA CHATURTHI HISTORY IN TAMIL: எனவே யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கி அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது. விநாயகர் சதுர்த்தியன்று இதுபோன்ற வழிபாடுகளை செய்து தும்பிக்கையானைத் துதித்தால் உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும்.

Leave a Comment